வில்லங்க ஆடியோவில் சிக்கிய ‘துரோக’ அமைச்சர்..! கண்கள் சிவந்த ஸ்டாலின்! அலறும் அறிவாலயம்..

By Ganesh RamachandranFirst Published Jan 25, 2022, 12:14 PM IST
Highlights

இந்த விவகாரம் அப்படியே ஆடியோ வடிவில் முதல்வரின் கவனத்துக்கு போய்விட்டதாம். இதை கட்சிக்கான துரோகமாக பார்க்கிறார் முதல்வர்

கருணாநிதியிடம் இல்லாத ஒரு அரசியல் பழக்கம் ஜெயலலிதாவிடம் இருந்தது. அது, தி.மு.க.வினரை தன் கட்சியான அ.தி.மு.க.வின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பரம விரோதிகளாக நடத்திட வேண்டும், எந்த சூழலிலும் அவர்களோடு நட்பு பாராட்ட கூடாது! என்பதில் குறியாக இருந்தார். தப்பித்தவறி யாராவது  இப்படி நட்பில் இருப்பது தெரிந்தால், அவர் எந்த கொம்பனாக இருந்தாலும் அடுத்த நொடியே பதவியில் இருந்து மட்டுமில்லாமல் கட்சியிலிருந்தே தூக்கி வீசி எறிந்தார்.

ஆனால் கருணாநிதி அப்படியல்ல. தன் கட்சியினர் அ.தி.மு.க.வினருடன் நெருக்கம் காட்டியபோது பெரிதாய் கண்டிக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. ஜெ.,விடம் ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு கறாராக நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டபோது, ‘நான் இதை செய்வதே என் கட்சி மற்றும் கட்சியினர் நலனுக்காகதான். ஏனென்றால், தமிழகத்தில் வலிமையாக இருப்பது இரு கட்சிகள்தான். அவர்களுக்குள் போட்டி, பொறாமை, எதிர்ப்புணர்வு இருந்தால்தான் தீவிர அரசியல் பணிகளை செய்வார்கள். நட்பாக இருந்தால் நிச்சயம் அரசியல் செய்யமாட்டார்கள்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது, உதவுவது, அண்டர்கிரவுண்டில் கைகுலுக்கிக் கொள்வது என்று சமரசமாகிவிடுவார்கள். இது கட்சியின் வளர்ச்சிக்கு விரோதமான விஷயம். கட்சி வளரவில்லை என்றால் கட்சியினரும் வளர முடியாது. எனவே என் கட்சி வெல்லவேண்டும், ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் இந்த போட்டியும், விரோத போக்கும் தேவை.’ என்றார் தன் அரசியல் நண்பர்களிடம்.

ஜெயலலிதாவின் இந்த உணர்வுதான் ஸ்டாலினிடமும் இருந்தது. அதனால்தான் கருணாநிதி தலைவராக இருந்தபோது ஒரு முறை செயற்குழுவில் ‘ஜெயலலிதா போல் நம் தலைமைக்கும் சர்வாதிகாரம் வேண்டும்’ என்றார். ஆக, தன் கட்சியினர் அ.தி.மு.க.வினரோடு கைகுலுக்க கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பது தெளிவாக புலனாகிறது.

இப்படியான சூழலில், தமிழக சிட்டிங் அமைச்சர் ஒருவர் மாஜி அ.தி.மு.க. அமைச்சருக்கு ஆறுதலும், தேறுதலும், அட்வைஸ் மழையும் பொழிந்து வகையாக சிக்கியிருக்கிறார் முதல்வரிடம்.

அதாவது சமீபத்தில் மாஜி அ.தி.மு.க. அமைச்சர் கே.சி.அன்பழகன் சொத்துக்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்தது. அன்பழகனுக்கு சொந்தமாக பல இடங்களில் இருக்கும் வீடுகள், தொழில் நிறுவனங்கள், உறவினர் இல்லங்கள் ஆகியவற்றில் வளைத்து வளைத்து ரெய்டு நடந்தது. இதில் கிறங்கிப்போய் உட்கார்ந்த அன்பழகன், ‘மீண்டும் ரெய்டு வருவார்களோ? வழக்கு பதிந்து கைது வரை போவார்களோ?’ என்று தன் சகாக்களிடம் நடுங்கிப் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில், அவரது உதவியாளரின் மொபைல் லைனுக்கு வந்திருக்கிறார் தமிழக சிட்டிங் அமைச்சர் ஒருவர். சீனியரான அவர், அன்பழகனிடம் “ஒண்ணும் கவலைப்படாதீங்கண்ணே. நல்ல அட்வோகேட் மற்றும் ஆடிட்டரை வெச்சுக்கிட்டு இந்த சொத்துக்கெல்லாம் கணக்கு ரெடி பண்ணி ஸ்டேட்மெண்ட் தயாரிச்சுடுங்க.  அப்படில்லாம் ஒண்ணும் உங்களை உள்ளே தள்ளிட முடியாது. கோர்ட்டுல கேஸு இழுத்துட்டே இருக்கும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் நாம அரசியலை நடத்திட்டு இருக்க வேண்டிதான். வேற ஏதாச்சும் உதவி வேணும்னா என்னை கேளுங்க. ’ என்று ஆறுதலும், உற்சாகமும் தந்துள்ளார்.

இதன்பின்னர்தான் அன்பழகனின் முகத்தில் ஒரு தெளிவு வந்ததாம்.

மாஜி அ.தி.மு.க. அமைச்சருக்கு, சிட்டிங் தி.மு.க. அமைச்சர் இந்தளவுக்கு உதவ காரணம், கடந்த ஐந்து வருடங்கள் அவர் அமைச்சராக இருந்தபோது அட்மிஷனில் துவங்கி ட்ரான்ஸ்ஃபர் வரையில் பலப்பல வேளைகளில் செமத்தியாக சாதித்தாராம் சிட்டிங் மாண்புமிகு. அந்த வகையில் கடுமையாக கல்லா கட்டியதோடு, கட்டிங்குகளையும் கன கச்சிதமாக வழங்கினாராம். அந்த விசுவாசம்தான் இப்போது பேச வைத்துள்ளது.

இந்த விவகாரம் அப்படியே ஆடியோ வடிவில் முதல்வரின் கவனத்துக்கு போய்விட்டதாம். இதை கட்சிக்கான துரோகமாக பார்க்கிறார் முதல்வர். கூடிய விரைவில் விசாரணை கமிஷன் இருக்கிறது! என்கிறார்கள்.

அட்றா!

click me!