முறைகேடு நடந்தது நடந்ததுதான்... அதிகாரியை மாற்றினால் மட்டும் தீர்வு கிடைக்குமா? விஷால் காட்டம்!

 
Published : Dec 06, 2017, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
முறைகேடு நடந்தது நடந்ததுதான்... அதிகாரியை மாற்றினால் மட்டும் தீர்வு கிடைக்குமா? விஷால் காட்டம்!

சுருக்கம்

Nothing will happen if you change the officer - Vishal

ஆர்.கே.நகரில் முறைகேடு நடக்கிறது என்று அதிகாரியை மாற்றினால் மட்டும் எதுவும் நடந்துவிடாது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வானோர் பட்டியலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. இதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நாள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது. நேற்று அந்த வேட்புமனுக்கள் மீது அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன. இதற்காக விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டங்களை செய்தார். பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

இது குறித்து நடிகர் விஷால், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதலில் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அதிகாரி கூறியிருந்தார். பின்னர் கீழே போய் பேசிவிட்டு வந்து நிராகரிக்கப்பட்தாக கூறுகிறார். ஆர்.கே.நகரில் முறைகேடு நடக்கிறது. அதிகாரியை மாற்றினால் மட்டும் எதுவும் நடந்துவிடாது. எதற்காக அதிகாரியை மாற்றுகிறார்கள் என்று பதிவு செய்ய வேண்டும் என்றும் விஷால் கேள்வி எழுப்பினார். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!