இதுக்கு மேலேயும் ஒண்ணும் முடியாது... மக்களிடம் மன்றாடும் முதல்வர்..!

By Thiraviaraj RMFirst Published Apr 22, 2021, 5:34 PM IST
Highlights

மக்களிடம் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். 

கர்நாடக மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு விகிதம் 15.47 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 116 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கொரோனாவால் இரண்டாம் முறையாக மாநில முதல்வர் எடியூரப்பா தாக்குதலுக்குள்ளானார். ஏப்ரல் 18ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மாநிலத்தில் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு ஓய்வு கூட எடுக்காமல் அவசர அவசரமாக இன்றே அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இச்சூழலில் மாநில மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “மக்களிடம் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். கர்நாடகாவில் நிலைமை கைமீறி போய்விட்டது. நமது பிரதமர் மோடி முகக்கவசம் அணிவதும், சானிடைசர் உபயோகிப்பதும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதுமே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே வழி என்கிறார். ஆகவே அனைவரும் அந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

click me!