பொது விநியோக திட்டத்தில் மாற்றமில்லை: அமைச்சர் காமராஜ் விளக்கம்

Asianet News Tamil  
Published : Jul 31, 2017, 06:11 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
பொது விநியோக திட்டத்தில் மாற்றமில்லை: அமைச்சர் காமராஜ் விளக்கம்

சுருக்கம்

Not to change in public distribution plan Minister Kamaraj explains

பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும், அனைத்து தரப்பினருக்கும் வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு விதிகள் அரசிதழி வெளியிடப்பட்டன. அதில், வருமான வரி செலுத்தக்கூடிய ஒரு நபரைக் கொண்ட குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் வழங்கக்கூடாது எனவும், தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினராக கொண்ட
குடும்பத்தற்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயிகள் குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் வழங்கக்கூடாது எனவும், மத்திய - மாநில அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் வழங்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உணவு துறை அமைச்சர் காமராஜ், செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது பேசியதாவது, பொது விநியோகத்தை பொறுத்தவரை மறைந்த ஜெயலலிதா அவர்கள் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், அனைவருக்குமான உணவு பாதுகாப்பை வழங்குகிற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து தரப்பினருக்கும் வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். பொது விநியோக திட்டத்தில் எள்ளளவும் மாற்றமில்லை. பழைய விலையிலேயே ரேஷனில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படும். மாநில அரசின் நிதியில் இருந்து சிறப்பு திட்டம் செயல்படுத்த விலக்கு பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது.

பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது. உணவு பொருட்கள் அனைவருக்கும் சென்றடைவதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. தமிழக அரசின் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாலேயே தேசிய உணவு பாதுகாப்பு
சட்டம் அமல்படுத்தப்பட்டது. மக்களின் நலனின் அக்கறை கொண்டுள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!