நான் இல்ல என் தொண்டன் கூட உங்களை பார்த்து பயப்பட மாட்டான்.. ஸ்டாலினை அசால்ட் செய்த அண்ணாமலை.

Published : Aug 18, 2022, 07:54 PM ISTUpdated : Aug 18, 2022, 08:01 PM IST
நான் இல்ல என் தொண்டன் கூட உங்களை பார்த்து பயப்பட மாட்டான்.. ஸ்டாலினை அசால்ட் செய்த அண்ணாமலை.

சுருக்கம்

அடக்குமுறையால் அச்சுறுத்தல் செய்யும்  சர்வாதிகாரியாக ஸ்டாலின் செயல்படுகிறார் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தான் மட்டும் அல்ல பாஊகவின் தொண்டன்கூட ஸ்டாலினுக்கு அஞ்சமாட்டான் என்றும் அவர் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:-  

அடக்குமுறையால் அச்சுறுத்தல் செய்யும்  சர்வாதிகாரியாக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தான் மட்டும் அல்ல பாஊகவின் தொண்டன்கூட ஸ்டாலினுக்கு அஞ்சமாட்டான் என்றும் அவர் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:-

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த, பாஜக மாநில துணைத்தலைவர் திரு.கே.பி.ராமலிங்கம் அவர்களை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா? பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான திரு.கே.பி.ராமலிங்கம் அவர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, மாநில அரசின் முறையான, அனுமதி பெற்று, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற போது, பூட்டப்பட்டிருந்த அந்த வளாகத்தைத் திறந்து  நினைவிடத்துக்குள் சென்றார் என்ற காரணத்திற்காக ஒரு கொடுங்குற்றவாளியை நடத்தும் விதத்தில், மாற்றுக் கட்சியினரை அச்சுறுத்தும் வகையிலே, மாநில அரசு நடந்து கொள்வது என்பது ஸ்டாலின் அவர்கள் வெளிப்படுத்தும் சர்வாதிகாரம்.

இதையும் படியுங்கள்: வருகிறது புதிய சட்டம்.. பேருந்துகளில் இப்படியெல்லாம் நடந்துக்கொள்ளும் ஆண்களை இறக்கிவிடுங்கள்.. அரசு உத்தரவு

அப்படி, பாரத மாதாவின் திருவுருவச்சிலைக்கு  மாலை அணிவிப்பதை குற்றம் என்று இந்த அரசு சொல்லுமேயானால், முதல்வர் அவர்களே! அதை மீண்டும், மீண்டும் செய்ய,  நாங்கள் எப்போதும் அஞ்ச மாட்டோம். சர்வாதிகாரி மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் அடக்கு முறையை, அராஜகங்களை எல்லாம் தமிழக மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் குடும்ப ஆட்சியில் கோலாச்சிக் கொண்டிருந்த உங்களின், அடுத்த பரிமாணமே இந்த சர்வாதிகாரம். உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம், காவல் துறையினரால் எங்களைத் துன்புறுத்தலாம். ஆனால் காலமும் காட்சியும் மாறும் என்பதை மறந்துவிடாதீர்கள். 

இதையும் படியுங்கள்:  பிடிஆர் மீது சேற்றை வாரி இறைக்க முயன்ற எஸ்.ஜி சூர்யா.. ஆதாரத்துடன் பொய்யை அம்பலப்படுத்திய நெட்டீசன்..

எங்கள் கட்சியின் அடிமட்டத்தொண்டன் கூட உங்கள் அடக்குமுறை சர்வாதிகாரப் போக்கினைக் கண்டு அஞ்சமாட்டான். நினைவில் கொள்ளுங்கள், யாரும் தொட்டுவிடமுடியாத உயரத்தில் உங்கள் சிம்மாசனம் இருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். உங்களை அந்தச் சிம்மாசனத்திலிருந்து இறக்கும் வரை, தமிழக மக்களின் குரலாக, எங்கள் குரல் மணியாக ஓங்கி ஒலிக்கும். தற்போது இதயநோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.கே.பி.ராமலிங்கம் அவர்கள், உடல் நலம் சீரடையும் முன்னர், மருத்துவர்கள் தடுத்தும், துன்புறுத்தி சிறைக்கு ஸ்டெச்சரில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரின் உடல்நலத்திற்கும், உயிருக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?