’உடலைத்தான் புதைக்க விடவில்லை... பெட்டிக்காவது கல்லறையில் இடம் கொடுங்க...’ கதறியழும் டாக்டர் சைமனின் மனைவி..!

By Thiraviaraj RMFirst Published Apr 22, 2020, 11:57 AM IST
Highlights

தமிழகத்தில் கொரோனவால் பலியான மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் மறுத்து கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்தினால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.
 

தமிழகத்தில் கொரோனவால் பலியான மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் மறுத்து கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்தினால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.

 சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் சைமன். சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லறையில் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றபோது எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, மருத்துவரின் உடல், அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அதிகாலை 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினரிடம் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்கு பின், பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். 

இதற்கிடையே, கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது கலவரத்தில் தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கீழ்ப்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யக் கூடாது என கூறி ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கியதோடு, போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.

கிறிஸ்துவ முறைப்படி சைமன் உடலை அடக்கம் செய்ய சென்றபோது அங்குள்ள நிர்வாகிகள் தான் அப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் மருத்துவர் உடலை கல்லறையில் அடக்கம் செய்ய மறுத்த நிலையில் வேலங்காட்டில் உள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


 
போலீசார் அளித்த விளக்கத்தை ஏற்று அப்பகுதி மக்கள் ஏற்று கொண்டனர், மரணம் என்பது அனைவருக்கும் நிகழும் சூழலில் கடைசி கட்டத்தில் மதம் பார்க்காமல் உதவிய இந்துக்களின் செயல் அனைவர் மனதிலும் இடம்பிடித்து விட்டது. அதே நேரத்தில் இறந்த மருத்துவர் சைமனின் மனைவி அவரது கணவரின் சவப்பெட்டியை வேலங்காட்டில் இருந்து எடுத்து கிறிஸ்துவ முறைப்படி கீழ்பாக்கம் கிறிஸ்துவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் என முதல்வருக்கு கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். ’சாகும் முன் எனது கணவரின் கடைசி ஆசை அதுதான்’என கூறியதாக அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 

click me!