திமுக ஆட்சியில் ஒரு மதுக்கடையைக்கூட மூடல... தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றல.. அன்புமணி ஆவேசம்!

By Asianet Tamil  |  First Published Jul 30, 2022, 9:29 PM IST

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடையைக்கூட மூடவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் மது உள்ளிட்ட  போதைப் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை ராஜாஜி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தார். 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசுகையில், “போதைப் பொருள் என்பது இளைஞர்கள், அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்னை ஆகும். தமிழகத்தில் 43 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள டாக்டர் ராம்தாஸ்  மது, புகையிலை, குட்கா, ஆன்லைன் ரம்மி உட்பட மக்கள் பாதிக்கும் பிரச்னைக்கு எதிராக போராட எங்களுக்கெல்லாம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக உள்ளனர்.

இதையும் படிங்க: எடப்பாடி தரப்புக்கே தேர்தல் ஆணையம் அழைப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்.!

Tap to resize

Latest Videos

பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் போதைப் பொருட்கள் இங்கு விற்பனையாகிறது. போதைப் பழக்கத்தால் தமிழகத்தில் குடும்பத்தில் ஒருவராவது பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எதிர்கால இந்தியாவையே சுமக்க வேண்டிய தூண்களான இளைஞர்கள், இந்தியாவுக்கே சுமையாகி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது முதல் கட்ட போராட்டம்தான். இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களுடைய போராட்டம் மேலும் தீவிரம் அடையும். கஞ்சா, அபின், ஹொக்கேன், ஹெராயின் போன்றவை பள்ளி, கல்லூரி வாசலிலே விற்பனை செய்யப்பட்டுகிறது. பேப்பர் வடிவில்கூடப் போதைப் பொருள் விற்பனை தமிழகத்தில் நடக்கிறது. மாணவர்கள் நாவில் அதை வைத்துக் கொள்கின்றனர். 

இதையும் படிங்க: ஸ்டாலினும் மோடியும் சிரித்து பேசினால் உடனே கூட்டணியா.?? அசால்ட் செய்த கனிமொழி

பாமக தலைவராகி ஸ்டாலினை சந்தித்தபோது எனது முதல் கோரிக்கை போதைப் பொருட்களுக்கு எதிராக காவல் துறை நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் 10 சதவீத மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்கிறது புள்ளி விவரம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1 சதவீதம் அதிகரித்துள்ளது. போதை பழக்கமுள்ள 27 சதவீத மாணவர்கள் எளிதில் போதைப் பொருட்கள் கிடைப்பதால் அடிமையானதாக கூறியிருக்கிறார்கள். எனவே, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்ய வேண்டும். என்னிடம் அதிகாரம் இருந்தால் 2 நாளில் போதைப் பொருளுக்கு முடிவு கட்டி விடுவேன். போதை விற்பனை நடைபெறும் பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை உடனடியாக பதவி நீக்கம் செய்துவிடுவேன்.

தமிழக அரசு போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்கள் மூலம் அடுத்த கட்ட போராட்டம் வெடிக்கும்.  இந்தியாவில் அதிக போதைப் பொருள் விற்கும் மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு போதைப் பழக்கம் காரணமாக இருக்கிறது. கலால் துறையின் பணி மது விற்பனையை அதிகரிப்பதுதான் என அமைச்சர் செந்தில் பாலாஜி தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடையைக்கூட மூடவில்லை. மது ஒழிப்பு தொடர்பாக  திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை” என்று அன்புமணி தெரிவித்தார். 
 

இதையும் படிங்க: 'எங்கும் கமிஷன் ; எதிலும் கமிஷன்..' திமுகவை ஓங்கி அடித்த எடப்பாடி பழனிசாமி

click me!