ஒரே ஒரு இடத்தைகூட விடக்கூடாது.. இந்த தேர்தல் நமக்கு ரொம்ப முக்கியம்.. தம்பிகளை தட்டி எழுப்பும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2021, 11:15 AM IST
Highlights

அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும், அதை நிறைவு செய்யும் சேவையும் தான் என்பதை உணர்ந்த 60 ஆண்டுகால அரசியல் சீரழிவை பற்றி பேசியும் காடு, மலை, அருவி, ஆறு,  ஏரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதும், இந்நிலத்தின் கனிம வளங்கள் யாவும் கொள்ளையடிக்கப்படும் அதனால் ஏற்படவிருக்கும் சூழலியல் பேரழிவுகள் குறித்தும் தொடர்ச்சியாக பரப்புரை செய்து உண்மையான மாற்று அரசியல் என்றால் என்ன என்பதை மக்களின் மனதில் பதிய அளவுக்கு உரத்த குரலில் முழங்கி நம் அரசியல் பணிகள் தமிழ் தேசிய இன விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை

.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிப்படுத்திட மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முழு விவரம் பின்வருமாறு:- கடந்த சட்டமன்றத் தேர்தல் 2021 நமக்கு அளப்பரிய நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக அமைந்தது. பெரிய பொருளாதார வசதிகள் குடும்ப பின்புலம் இன்றி சாதி மத உணர்வை சாகடித்து நாம் தமிழர் என்று ஒன்று திரண்டு நம் தேசிய இனத்தின் அரசியல் விடுதலைக்காக நேர்மையோடும் நெஞ்சுறுதியோடு நாம் சிந்திய கடின உழைப்பு ஒருபோதும் வீண் போகாது.

எப்போதும் வெற்றிக்காக அடித்தளம் உழைப்பின் வியர்வையில் இருக்கிறது என்கிறார் பேரறிஞர் வால்டோர். எதனாலும் ஒப்பிடமுடியாத ஈடு இணையற்ற உழைப்பினை வழங்கி நாம் தமிழர் என்கின்ற மாபெரும் அரசியல் அமைப்பினையும், நமது எண்ணத்திற்கு ஏற்ப கிடைத்திட்ட சின்னமான விவசாயி சின்னத்தையும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்து நமது வெற்றிக்கான அடித்தளத்தை மிகவும் வலிமையாக அமைத்துள்ளோம், ஆணுக்குப் பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகத்திற்கு காட்ட இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 50 விழுக்காடு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம், பொது தொகுதியில் ஆதி தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்களுக்கு மற்ற எல்லா கட்சிகளைக் காட்டிலும் அதிக வாய்ப்புகள் தமிழர் நிலத்தில் காலம் காலமாய் புறக்கணிக்கப் பட்ட பல ஏழை சமூகங்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என இதுவரை ஆண்ட ஆளுகின்ற கட்சியினர் எவரும் செய்யத் துணியாத புரட்சிகர செயல்களை கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் துணிந்து செய்து இருக்கிறோம்.

அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும், அதை நிறைவு செய்யும் சேவையும் தான் என்பதை உணர்ந்த 60 ஆண்டுகால அரசியல் சீரழிவை பற்றி பேசியும் காடு, மலை, அருவி, ஆறு,  ஏரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதும், இந்நிலத்தின் கனிம வளங்கள் யாவும் கொள்ளையடிக்கப்படும் அதனால் ஏற்படவிருக்கும் சூழலியல் பேரழிவுகள் குறித்தும் தொடர்ச்சியாக பரப்புரை செய்து உண்மையான மாற்று அரசியல் என்றால் என்ன என்பதை மக்களின் மனதில் பதிய அளவுக்கு உரத்த குரலில் முழங்கி நம் அரசியல் பணிகள் தமிழ் தேசிய இன விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. 

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்ற மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களை சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும், தங்கள் அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடவும், களத்தில் நேரடியாக பங்கேற்க முடியாத உறவுகள் தங்களால் இயன்ற நிதி உதவி அல்லது பொருளுதவி வழங்கி களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

click me!