
தூத்துக்குடி தூப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை, நடிகர் ரஜினிகாந்த் நல்லிணக்கத்தின் அடிப்படையில் இன்று சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவருக்கு தூத்துக்குடி மக்கள் அமோகமான வரவேற்பு அளித்தனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ரஜினி, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக வாக்குறுதியளித்தார்.
அப்போது ரஜினி ”கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என கருத்து தெரிவித்தார்.” அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ”நீங்கள் பேசுவது போலீசையும் அரசையும் ஆதரித்து பேசுவது போல இருக்கிறதே?” என கேட்டிருக்கிறார். இந்த கேள்வியால் கடுப்பான ரஜினி ”யே யாருய்யா?” என ஏக வசனத்தில் எரிச்சலடைந்திருக்கிறார். மேலும் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு ”வேற யாரு? கேள்வி இருக்கா? என கேள்வி எழுப்பி இருக்கிறார். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு கடுப்புடன் தனது காரில் ஏறி சென்றிருக்கிறார்.
ரஜினியின் இந்த பேச்சு அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்திருந்தாலும், ஆளும் கட்சியிலிருந்து முதல்வர் நீங்க இன்னிக்கு நீங்க பேசினதுக்கு ரொம்ப ஹேப்பியா இருக்காருன்னு ரஜினிக்கு தகவல் வந்ததாம். ஆமாம் ரஜினி பேசினதுக்கும் எடப்பாடி ஹெப்பிக்கு என்ன சம்பந்தம்? அப்படி எடப்பாடி ஹேப்பியா ஆகுற அளவுக்கு என்ன கருத்து சொன்னாரு? சமூக விரோதிகளைத் தடுக்க அரசு தவறிவிட்டது. ஜெயலலிதா இருந்தவரை சமூக விரோதிகளைக் கட்டுக்குள் வைத்திருந்தார். இப்போதைய அரசு அதைச் செய்யத் தவறிவிட்டது. கூட்டத்துக்குள் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள். போராட்டம் பண்ணும்போது ஜாக்கிரதையா இருக்கணும். புனிதமான போராட்டத்தை ரத்தக் கறையாக்கிவிட்டார்கள். அடிக்கடி தமிழகத்தில் போராட்டம் நடந்துகிட்டே இருக்கு. இப்படியே இருந்தால் எந்த தொழில்களும் இங்கே புதுசா வராது. போராட்டத்துக்கு அரசாங்கமும் கவனமாக அனுமதி கொடுக்கணும்...’ என்று ரஜினி பேச... அது கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. இதற்கு ஏன் எடப்பாடியார் ஏன் ஹெப்பியானாரு?
‘எதற்கெடுத்தாலும் ஆளுங்கட்சி ராஜினாமா செய்யணும்னு சொல்றதெல்லாம் தேவையில்ல. அந்த அரசியலுக்குள்ள போக நான் விரும்பல’ என்றும் சொன்னது தான் எடப்பாடியாரை குஷியாக்கியதாம்.
ரஜினி காலையில் சென்னையில் பேட்டி தந்தது, தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்கு சென்று அசிங்கப்பட்டது, திரும்ப சமூக விரோதிகள், விஷமிகள் என சொன்னது, இதனையடுத்து சென்னை திரும்பியதும் ஏர்போர்ட்டில் விஜயகாந்த்தை தோற்கடிக்கும் அளவிற்கு “யே” என கத்தியது வரை எடப்பாடியார் கவனத்துக்கு வந்ததாம். இன்று ரஜினிகொடுத்த ஸ்டேட்மென்ட்டை பார்த்த எடப்பாடியாரோ, அவரு மேல எனக்கு எப்பவுமே மரியாதை உண்டு. எல்லோரும் ஒட்டுமொத்தமாக நம்மை மட்டுமே குறை சொல்லிட்டு இருக்கும்போது ரஜினி மட்டும்தான் நம்மள விட்டுக்கொடுக்காம பேசியிருக்காரு, இவருக்குள்ளேயும் என்னமோ இருந்துருக்கு பாருங்களேன் என சொன்னாராம்.
இந்த நேரத்தில் நான் ரஜினிக்கு நன்றி சொன்னால், அதையும் அரசியல் ஆக்கிடுவாங்க. அதனால், நம்ம செய்தித் தொடர்பாளர்கள் மூலமாக ரஜினியின் பேச்சுக்கு வரவேற்பை பதிவு செய்யச் சொல்லுங்க. அது மட்டுமல்ல, இனி எந்தக் கூட்டங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் ரஜினிக்கு எதிராக யாரும் எதுவும் பேச கூடாதுன்னு சொல்லிட்டாராம் எடப்பாடியார்.