யாரும் ஏமாற்ற முடியாது...! நீங்க யாருக்கு ஓட்டு போட்டிங்கன்னு தெரிஞ்கிக்கலாம்.. தேர்தல் ஆணையத்தின் அதிரடி திட்டம்...!

First Published Mar 27, 2018, 11:32 AM IST
Highlights
Nobody can deceive You can find out who is running the competition


கர்நாடக பேரவை தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்திருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதத்துடன் 5 ஆண்டுகள் முடிவடைவதால் அங்கு தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், கர்நாடக மாநில பேரவை தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கர்நாடகா சட்டசபைக்கு ஒரே கட்டமாக   மே 12  ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் மே 15 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும்  கர்நாடக பேரவை தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்திருப்பதாகவும் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க எளிமையான முறை பின்பற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.

click me!