ஜெ. மரணம் தொடர்பான தவறான தகவலை பரப்ப வேண்டாம் !! அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் !!

 
Published : Jan 17, 2018, 10:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஜெ. மரணம் தொடர்பான தவறான தகவலை பரப்ப வேண்டாம் !! அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் !!

சுருக்கம்

No wrong probaganda about Jey death

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த தேதி தொடர்பாக தவறான தகவலை பரப்புவது துரதிருஷ்டவசமானது என அப்பல்லோ நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

மன்னார்குடியில்  நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் சசிகலா சகோதரர் திவாகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நடந்த 2016  ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம்  4-ந்தேதி மாலை 5-15 மணிக்கே முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பால்  மரணமைந்துவிட்டார் என தெரிவித்தார்.

4 ந்தேதி இரவே தான் அங்கு சென்றதாகவும்,  ஜெயலலிதா மரணத்தை ஏன் அறிவிக்கவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது அதன் தலைவர் பிரதாப்  ரெட்டி  எங்கள் மருத்துவமனையின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளன, அதற்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தாக அந்த கூட்டத்தில் திவாகரன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

திவாகரனின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் இது குறித்து விசாரரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஜெயலலிதா மரணமடைந்த தேதி குறித்து தவறான தகவலை பரப்புவது துரதிர்ஷ்டவசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது மருத்துவமனைகள் மேற்கொள்ளும் அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன எனவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணத்தை அறிவித்ததில் மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!