
ஸ்பெக்டரம் வழக்கின் மைய புள்ளியாக பார்க்கப்பட்டவர் ஆ.ராசா. அந்த வழக்கு விசாரணையில் இருந்த கால கட்டத்தில் அரசியல் ரீதியாக பெரும் சவால்களையும், புறக்கணிப்புகளையும், வேதனைகளையும் அனுபவித்தார்.
இந்நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை சமீபத்தில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. நீதிபதி சைனி வழங்கிய தீர்ப்பின்படி அந்த வழக்கின் அத்தனை குற்றவாளிகளும் விடுதலையாகின. இந்த தீர்ப்பை ராசா, கனிமொழி, சரத் உள்ளிட்ட அத்தனை பேரும் மறுபிறவி எடுத்தது போல் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர் இன்று வரை.
இந்நிலையில் இன்று ட்விட்டரில் இணைந்திருக்கிறார் ஆ.ராசா. இன்று காலை 10:43 மணிக்கு தனது முதல் ட்விட்டை பதிவு செய்துள்ளார். அதில் “ ‘டிவிட்டர்’ எனும் சமூக வலைத்தளம் இயங்கும் 3ஜி அலைக்கற்றையை தேசத்திற்கு அறிமுகப்படுத்தியவன் எனும் பெருமிதத்தோடு உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன்.’ என்று அதில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த ட்விட்டிற்கு ஏக வரவேற்பு கிடைத்துள்ளது. விடுதலை தீர்ப்பு தந்த மகிழ்ச்சியுடன் 3ஜி-க்கு தானே சூத்ரதாரி என்று பெருமை பேசியிருப்பது ஆ.ராசா...சைக்கிள் கேப்பில் சாட்டிலைட் ஓட்டியிருப்பதை காட்டுகிறது.