அண்ணாமலை தலைவரான பின் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதையே இல்லை... முன்னாள் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!!

By Narendran S  |  First Published Mar 13, 2023, 7:49 PM IST

அண்ணாமலை தலைவரான பிறகு மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதையே இல்லை என முன்னாள் தமிழக பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் சிவபாலன் குற்றம்சாட்டியுள்ளார். 


அண்ணாமலை தலைவரான பிறகு மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதையே இல்லை என முன்னாள் தமிழக பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் சிவபாலன் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடந்த 20 ஆண்டுகளாக பாஜகவில் இளைஞர் அணி மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். தற்போது உள்ள மாநில தலைமை பழைய நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை தருவதில்லை. இதற்கு அண்ணாமலை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். கடந்த நான்காண்டு 4 மாத காலமாகவே பாஜகவில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தேன். அண்ணாமலை பாஜக தலைவர் ஆன பின்னர் பழைய நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை.

இதையும் படிங்க: மனிதவெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள்..! ஸ்டாலினுக்கு எதிரான போராட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

Tap to resize

Latest Videos

இப்போது நடப்பதை பற்றி மட்டுமே அவர்கள் நினைக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்தவர்கள் மரியாதை இல்லாத நிலையில் உள்ளனர். அதுவும் நான் விலகுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஒரு சதவீதம் வேலை செய்யாததன் காரணமாக 99 சதவீதம் வேலை செய்தவர்களை தண்டிக்கக் கூடாது. இதனால் கட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாஜக சமூக வலைதளங்களில் ஒரு பிரிவாக  வேலை செய்கிறார்கள். அது கோஷ்டி போல் உருவாகிறது. பாஜகவில் இருந்து வெளியேறுவதற்கு நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? இல்லையா?- ஓபிஎஸ் பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்

இவ்வளவு காலமும் அந்த கட்சியில் இருந்தாகிவிட்டது என்ன செய்வது என்ற மனநிலையில் பலரும் இருக்கிறார்கள். விரைவில் அவர்களும் வெளியேறுவார்கள். பாஜகவில் தனிநபர் துதி பாடுவது ஒரு பிரச்சனையாக எழுந்து வருகிறது. தமிழக அரசு தற்போது மாநிலத்தில் நல்லாட்சி புரிந்து வருகிறது. அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்டத்திற்கான வளர்ச்சியில் முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் நான் அவரது முன்னிலையில் திமுகவில் நான் இணைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.  

click me!