சும்மா வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதீங்க.. அதிமுகவிற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

By vinoth kumarFirst Published Jul 24, 2021, 5:02 PM IST
Highlights

லஞ்ச ஒழிப்பு சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம். தமிழகத்தில் திமுகவினரின் அராஜக போக்கு நீண்ட நாள் நீடிக்காது. எனது வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியதில் அரசியல் காழ்ப்புணர்வு இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 26 இடங்களில் வீட்டில் நேற்று முன்தினம் திடீர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தப்பட்டது. அதில், கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணமும், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை சிக்கின. மேலும், அவரது வங்கி லாக்கர்களைத் திறந்து சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு அதிமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்தது. 

இந்நிலையில், இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார். மேலும், எனக்கு கரூரிலும், சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன். எந்த ஆவணமும் சிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட பணத்துக்கு கணக்கு உள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிப்போம். எனது வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. லஞ்ச ஒழிப்பு சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம். தமிழகத்தில் திமுகவினரின் அராஜக போக்கு நீண்ட நாள் நீடிக்காது. எனது வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்;- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. 2016 - 2021 ஆண்டுகளில் உள்ள சொத்து மதிப்பின் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

click me!