ஊழல்வாதிகளுக்கு இந்தியாவில் இடமில்லை !! கேரள நிகழ்ச்சியில் கெத்து காட்டிய மோடி !!

By Selvanayagam PFirst Published Aug 30, 2019, 10:22 PM IST
Highlights

புது இந்தியாவில் யாராக இருந்தாலும் ஊழலுக்கு அனுமதி இல்லை என்றும், புதிய இந்தியா குறிப்பிட்ட சிலருக்காக அல்ல, ஒவ்வொரு இந்தியருக்குமானது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் மலையாள மனோரமா நாளிதழின் கருத்தரங்கம் நடைபெற்றது இதில் டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் பங்கேற்று பேசினார்.
:
அப்போது இந்தியா மிக வேகமாக மாறி வருவதாகவும், அது மக்களின் நலனுக்காகவே நடைபெற்று வருகிறது. இப்போது புதிய இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியா குறிப்பிட்ட சிலரை பற்றியது அல்ல, பொறுப்புள்ள அரசு மற்றும் பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது. புதிய இந்தியாவில் யாராக இருந்தாலும் ஊழலுக்கு இடமில்லை என கடுமையாக பேசினார்.


.
முன்பு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பெரிய நகரங்களில் வசிப்போர், பெரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்று குறிப்பிட் மோடி, புதிய இந்தியாவில் திறமை இருப்பவர்கள் இப்போது தங்களின் பெயரை பொறிக்க போதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வெறும் நான்கு சுவர்களை கட்டி, வீடுகள் என்ற பெயரில் ஏழைகளுக்கு கொடுக்க மத்திய அரசு விரும்பவில்லை என்ற பிரதமர், வீடுகள் அற்ற ஒன்றரை கோடி பேருக்கு மிக துரிதமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் இல்லங்களை உருவாக்கவே அரசு பாடுபட்டு வருகிறது.

சமீபத்தில் பக்ரைன் சென்ற போதும், ஓமன், சவுதி அரேபிய சிறையில் இருந்த இந்தியர்கள் 250 பேர் விடுதலை செய்யப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்து பேசினார்.

click me!