சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது... சித்தியின் சீரியஸ் பேச்சு..!

Published : Feb 02, 2021, 09:30 PM IST
சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது... சித்தியின் சீரியஸ் பேச்சு..!

சுருக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்று அக்கட்சியின் மகளிர் அணி தலைவி ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.  

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் மூழ்கியுள்ளன. சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளிடம் சீட்டு பெறும் வேளையில் காய்களை நகர்த்திவருகின்றன. அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சியும் அதிமுக கூட்டணியில் சீட்டுகளைப் பெறுவதற்காக தொடர்ந்து கட்சிக் கூட்டங்களை நடத்திவருகிறது. அக்கட்சியின் கொங்கு வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் பங்கேற்று பேசினார்.


அப்போது வர் பேசுகையில், “நான் இதுவரை எனது தொழில் காரணமாக அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை. ஆனால், இந்த தேர்தலில் சின்னத்திரை சீரியலில் நடிப்பதை குறைத்துகொண்டு  தலைவரின் (சரத்குமார்) வெற்றிக்காக பாடுபட உள்ளேன். தேர்தல் காலத்தில் கடினமாக உழைக்க வேண்டும். உழைப்பால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியும். வரஉள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்ற மாற்றத்தையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.” என்று ராதிகா சரத்குமார் பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு