பொதுமக்கள் யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை.!! பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அறிவிப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Apr 18, 2020, 9:05 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
 

T.Balamurukan

கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உணவு தானியங்களான அரிசி,கோதுமை போதுமான அளவு வழங்கப்படும்.அந்த அளவிற்கு கையிருப்பு இருப்பதாகவும் பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

"கொரோனா வைரஸ் காரணமாக நடைபெற்று வரும் ஊரடங்கு காலத்தின் போது பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.. மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் டுவிட்டை பகிர்ந்து கொண்டார் பிரதமர் மோடி, தனது டுவிட்டரில், "பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தயவு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம். ஒன்றாக இருந்து கொரோனா தொற்றை தோற்கடிப்போம்" என்று பதிவு செய்துள்ளார்.

click me!