1கோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஸ்ரிவால் அறிவிப்பு...இது யாருக்கெல்லாம் பொருந்தும்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 18, 2020, 8:48 PM IST
Highlights

கொரோனா நோயாளிகளைக் கையாளும்போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுவோரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஸ்ரிவால் அறிவித்துள்ளார்.  
 

.T.Balamurukan

கொரோனா நோயாளிகளைக் கையாளும்போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுவோரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஸ்ரிவால் அறிவித்துள்ளார்.  இந்தியாவில் 24 மணிநேரத்தில் 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.43 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவில் இதுவரைக்கும் 14378 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் கெஸ்ரிவால், "கொரோனா நோயாளிகளைக் கையாளும்போது நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைத் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் இந்தப் பயனைப் பெறுவார்கள் என்றார்.
டெல்லியில் நோய்ப் பரவல் காரணமாக 71 தடுப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள்  எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்த வீட்டுக்குக்கூட செல்ல வேண்டாம் என்றும் அரவிந்த் கேஜரிவால் குறிப்பிட்டார்.

click me!