எங்களது உறவை யாராலும் அழிக்க முடியாது... யாரை பற்றி கூறுகிறார் அமைச்சர் உதயநிதி!!

By Narendran S  |  First Published May 1, 2023, 4:47 PM IST

தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சுமார் 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சுமார் 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே 1923-ம் ஆண்டு முதல் மே தினம் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் உயிரை மதிக்கும் இயக்கம் திமுக.

இதையும் படிங்க: கர்நாடகா தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம்; அப்படி என்றால் என்ன?

Latest Videos

இந்தியாவில் முதன் முறையாக விடுப்புடன் சம்பளம், 20 சதவீதம் போனஸ் கொடுத்ததும், கூலி தொழிலாளர்களுக்கு வீடு, கை ரிக்சா ஒழிப்பு, பணிக்கொடை வழங்கல், விபத்து காப்பீட்டு திட்டம் என அனைத்தையும் தந்தது கலைஞர் அரசு. தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி அணியின் பொதுக்குழு நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு.! ஓபிஎஸ் அதிரடி உத்தரவு

12 மணி நேர வேலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்திருந்தார். மே தின விழாவான இன்று அந்த சட்டத்தை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். திமுக அரசு எப்போதும் தொழிலாளர் நலனுக்கு பாடுபடும். திமுக என்றைக்குமே தொழிலாளர்கள் நலனை பேணிக் காக்கும். தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழித்து விட முடியாது என்று தெரிவித்தார்.

click me!