அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது! போற போக்கில் ஓபிஎஸ்-ஐ மறைமுகமாக தாக்கிய இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Mar 27, 2023, 6:55 AM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்கம் நேர கட்டுப்பாடு கொண்டு வந்துவிட்டது. விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் என்று பாடுபடும் கட்சி அதிமுக தான். 

தொண்டனோடு தொண்டனாக இருந்து தான் இன்றைக்கு இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன் என  இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தஞ்சையில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். திருமணவிழாவில் பேசிய அவர்;- திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்கம் நேர கட்டுப்பாடு கொண்டு வந்துவிட்டது. விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் என்று பாடுபடும் கட்சி அதிமுக தான். 

இதையும் படிங்க;- பாஜகவின் ஆதரவு இல்லாமல் அதிமுகவால் செயல்பட முடியாது... சி.டி.ரவி அதிரடி!!


தமிழ்நாட்டு மக்களுக்கு உணவளிக்கக்கூடிய டெல்டா மாவட்டங்கள். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. நெற்பயிர் சிறப்பாக வளர வேண்டும் என்றால் நடவு பணிகள் முடிந்த சில குறிப்பிட்ட காலங்களில் பயிர்களில் உள்ள களைகள் எடுக்கப்படும். அப்படியாக அதிமுகவில் உள்ள களை எடுக்கப்பட்டுவிட்டது. இனி அதிமுக என்னும் பயிர் நன்றாக வளர்ந்து விளைச்சலை கொடுக்கும். ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவை யாராலும் ஒன்று செய்ய முடியாது. தொண்டர்களால் வளர்ந்து உருவான கட்சி அதிமுக. இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

இதையும் படிங்க;-  அதிமுக பெண் நகராட்சி தலைவரை தட்டித்தூக்கிய திமுக.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!

அதிமுகவில் தனி மனித ஆதிக்கம் கிடையாது. எப்போதும் தொண்டன் தான். தொண்டனோடு தொண்டனாக இருந்து தான் இன்றைக்கு இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன். அதிமுகவில் என்னை போல ஒரு லட்சம் பழனிசாமி இருந்துக்கொண்டு இருக்கிறார்கள். தொண்டர் உழைப்பால் தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி இல்லை என்றால் யாராவது ஒருவர் வளர்ந்து வந்து இந்த கட்சியை ஆள்வார்கள் என இபிஎஸ் பேசியுள்ளார். 

click me!