எதிர்கட்சிகளை பேசவிடாமல் அடக்குமுறையை ஏவிவரும் மோடி அரசு எதிர்கட்சிகளின் குரல்வலையை நெரித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்கட்சிகளை பேசவிடாமல் அடக்குமுறையை ஏவிவரும் மோடி அரசு எதிர்கட்சிகளின் குரல்வலையை நெரித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சிதம்பரம் காந்திசிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி நில அளவர் தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்!!
இதில் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசினால் அதற்கு ஆளும்கட்சி பதில் அளிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சிகளை பேசவிடாமல் அடக்குமுறையை ஏவிவரும் மோடி அரசு எதிர்கட்சிகளின் குரல்வலையை நெரித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார்.
இதையும் படிங்க: வயநாட்டில் இப்படின்னா; கர்நாடகாவுல வேற மாதிரி; கூட்டத்துக்கு வரணும்ன்னா அலவன்ஸ் வேணுமாம்!!
பாஜக தன்னுடைய புதைக்குழியை, தோண்டிக்கொள்வதில் ஆர்வமாக உள்ளது. இந்த நாடு ஜனநாயக நாடு. பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமை உள்ள நாடு. எந்தவொரு தவறனா விஷயத்தையும் ராகுல் காந்தி சொல்லவில்லை. உண்மைக்கு புறம்பான விஷயங்களை அவர் சொல்லவில்லை. ராகுல் காந்தி சிறு குழந்தை அல்ல, விளையாட்டுப் பிள்ளை அல்ல. வாழ்க்கையில் பலவற்றை துறந்து இந்த அரசியலுக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.