ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? ஒரே போடாக போட்ட வைத்தியலிங்கம்.. அதிர்ச்சியில் EPS..!

By vinoth kumarFirst Published Jun 16, 2022, 11:29 AM IST
Highlights

 அதிமுக சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுச்செயலாளராக யாராலும் வரமுடியாது. சட்டத்தில் இடம் கிடையாது. இதுபோன்ற செய்திகள் வருவது கட்சிக்கு வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுபோன்ற செய்திகள் வருவது கட்சிக்கு வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். 

ஒற்றை தலைமை

அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா்கள், தலைமை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிமுக அலுவலகத்துக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்களில் ஒரு தரப்பினா் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனா். மற்றொரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஜெயக்குமார்

இந்நிலையில், கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சா் ஜெயக்குமார் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தினா். அதிமுகவின் தொண்டா்களும், நிர்வாகிகளும் எதிர்பார்ப்பது ஒற்றைத் தலைமைதான். ஆனால், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும். பொதுக்குழுவில் இது தொடா்பாக விவாதிக்கப்படும் என்றார். 

மூத்த நிர்வாகிகள் ஆலோசனை

ஜெயக்குமாரின் இந்தக் கருத்துக்குப் பிறகு ஒற்றை தலைமை பற்றிய விவாதங்கள் அதிமுகவில் சூடுபிடித்துள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமையா ஓபிஎஸ் இருக்க வேண்டும், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓபிஎஸ் என்றெல்லாம் சென்னையின் பிரதான சாலைகளில் பெரிய போஸ்டர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியிருந்தனர். இதற்கிடையே ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் அவர்களுடைய இல்லத்தில் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பொதுச்செயலாளராக சட்டத்தில் இடம் கிடையாது

இந்நிலையில், அதிமுக மூத்த தலைவரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோ ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடித்து விட்டு வெளியே வந்த வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கட்சி பலமாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் கருத்து. ஒற்றை தலைமை தொடர்பாக ஏதும் விவாதிக்கவில்லை. அதிமுக சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுச்செயலாளராக யாராலும் வரமுடியாது. சட்டத்தில் இடம் கிடையாது. இதுபோன்ற செய்திகள் வருவது கட்சிக்கு வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. ஒற்றை தலைமை என்பது கிடையாது. இரட்டை தலைமை தான். திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்தத கருத்து எனவும் தெரிவித்துள்ளார். 

click me!