எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை… கிங் மேக்கராகும் மாநில கட்சிகள் !! கருத்துக் கணிப்பில் பகீர் தகவல்!!

By Selvanayagam PFirst Published Jan 25, 2019, 6:57 AM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்றும், அவை யாரைக் கை காட்டுகின்றனவோ  அவர்களே ஆட்சி அமைப்பார்கள் என்றும் இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

வரும் மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் . பாஜக மற்றும் பல மாநில கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. கூட்டணி, தேர்தல் பிரச்சார வியூகம் போன்றவற்றில் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மூட் ஆஃப் நேஷன் என்ற தலைப்பில் இந்தியா  டுடே மற்றும் கார்வி நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி 237 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், பாஜக கடந்த 2014 தேர்தலைவிட 99 தொகுதிகளை இழக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

இதே போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 166 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் இது கடந்த தேர்தலைவிட 106 தொகுதிகள் அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் திமுக, தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, இடதுசாரிகள் போன்றவை 140 இடங்களை பிடிக்கும் என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏபிபி-சி .ஓட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பிலும் கிட்டதட்ட இதே போன்ற முடிவுகள் தான் வந்துள்ளது. அதன்படி பாஜக கூட்டணி 233 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 167 இடங்களையும், பிற மாநில கட்சிகள் 143 இடங்களையும் கைப்பற்றும்  என தெரியவந்துள்ளது.

எப்படிப் பார்த்தாலும் மாநில கட்சிகளின் பங்கு ஆட்சி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திமுக, திரிணாமல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்றும் இநத கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

click me!