அமைச்சர் பதவி இல்லை.. தளராமல் சுற்றிச் சுழலும் ஆயிரம் விளக்கு எம்எல்ஏ.. மயானத்தில் திடீர் ஆய்வு.

Published : May 14, 2021, 10:39 AM ISTUpdated : May 14, 2021, 11:30 AM IST
அமைச்சர் பதவி இல்லை.. தளராமல் சுற்றிச் சுழலும் ஆயிரம் விளக்கு எம்எல்ஏ.. மயானத்தில் திடீர் ஆய்வு.

சுருக்கம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உடல்களை எரியூட்டும் இடங்களில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.  

கொரோனா உச்சமடைந்து வரும் நிலையில், ஆயிரம்விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கூடுதல் எரிமேடைகளை அமைத்து தர அவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

கொரோனா பெருந்தொற்று காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உடல்களை எரியூட்டும் இடங்களில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் மின் மயானத்தை சட்டமன்ற உறுப்பினர் மரு.எழிலன் நாகநாதன், மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். 

அப்போது மயானத்தில் உள்ள இட நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து, கூடுதலாக ஒரு மின் எரிமேடையை உடனடியாக அமைத்து தரவும், ஒரு கண்காணிப்பு கேமரா பொறுத்தவும் மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினரின் அறுவுறுத்தலின்படி மிக விரைவில் கூடுதல் மின் எரிமேடை அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆய்வின் போது ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி திமுக செயலாளர்  ஜெ.எஸ். அகஸ்டின் பாபு மற்றும் திமுக ஆயிரம் விளக்கு பகுதி நிர்வாகிகள் உடனிருந்தார். 

மருத்துவர் எழிலனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அவருக்கு அது வழங்கப்படவில்லை. ஆனாலும் எழிலன் மருத்துவர் என்ற முறையில் தனது தொகுதி மக்களுக்கு முன்வந்து இலவச கொரோனா சிகிச்சை வழங்குவது, மற்றும் தொகுதியில் அரம்ப சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவது, போன்ற கொரோனா தடுப்பு பணிகளில் தன்னைத்தானே தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.  

 

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு