ஊரடங்கை கண்டு மக்கள் அஞ்சவேண்டும்.. காவலர்களுக்கு உத்தரவு.. காவல்துறை ஆணையர் எச்சரிக்கை.

Published : May 14, 2021, 09:53 AM IST
ஊரடங்கை கண்டு மக்கள் அஞ்சவேண்டும்.. காவலர்களுக்கு உத்தரவு.. காவல்துறை ஆணையர் எச்சரிக்கை.

சுருக்கம்

கூட்டத்தில் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் ஊரடங்கு முறையாக கண்கானிக்கப்படுவதில்லை என்றும், மக்கள் தேவையற்ற முறையில் சாலைகளில் பயணம் மேற்கொள்வதாகவும் அவர் அதிருப்தி தெர்வித்தார். 

சென்னையில் ஊரடங்கு முறையாக கண்கானிக்கப்படுவதில்லை என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அதிருப்தி வெளிபடுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் ஊரடங்கை கண்கானிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள அமலாக்க குழுக்களோடு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் ஊரடங்கு முறையாக கண்கானிக்கப்படுவதில்லை என்றும், மக்கள் தேவையற்ற முறையில் சாலைகளில் பயணம் மேற்கொள்வதாகவும் அவர் அதிருப்தி தெர்வித்தார். வெள்ளிக்கிழமை (இன்று) முதல் ஊரடங்கின் கட்டுப்பாடுகளை கடுமையாக கண்கானிக்க வேண்டும் என்றும் சென்னையில் கூடுதலான கண்காணிப்பு தடுப்புகளை அமைத்து மக்கள் தேவையற்ற முறையில்  வாகனங்களில் பயணிப்பதை  தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

இன்று முதல் ஊரடங்கை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டும் என்ற வகையில் கண்கானிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர், ககந்தீப் சிங் பேடி 12 மணிக்கு மூடப்படாமல் இருக்கும் கடைகளுக்கு ஒரு முறை அறிவுத்தல் கொடுக்க வேண்டும் என்றும்  மறுமுறை கடைக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும் 15 மண்டலங்களிலும் உள்ள அமலாக்க குழுவினை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!