சீமான் துயரத்தில் பங்கெடுத்த வைகோ.. தந்தையின் மறைவு வருத்தமளிப்பதாக உருக்கம்.

Published : May 14, 2021, 09:40 AM IST
சீமான் துயரத்தில் பங்கெடுத்த வைகோ.. தந்தையின் மறைவு வருத்தமளிப்பதாக உருக்கம்.

சுருக்கம்

திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார் அவரது மறைவு நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் இறந்தார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார் அவரது மறைவு நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் என்ற கிராமத்தில் சீமான் பெற்றோர்கள் செந்தமிழன், அன்னம்மாள் வசித்துவந்தனர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று அரணையூரில் காலமானார். இந்நிலையில்பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் சீமானுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில்  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சீமான் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விவரம்:  

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தாயைப் போற்றும் அதே நேரத்தில், தந்தை வழிக் குடி மரபைத்தான் நாம் பின்பற்றி வருகின்றோம். தந்தை வழியில் மரபுகளை அமைத்துக் கொள்வது நம்முடைய பண்பாடு. அந்த நிலையில், பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள திரு.சீமான் அவர்களின் தந்தையின் மறைவு, அவருக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் பேரிழப்பு ஆகும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், செந்தமிழன் அவர்களுக்கு, புகழ் வணக்கம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?
ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!