தெம்பும் திராணி இல்லாத ஸ்டாலின்! எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது.. எகிறும் இபிஎஸ்

By vinoth kumarFirst Published Nov 7, 2022, 7:32 AM IST
Highlights

அதிமுக ஆட்சியை வீழத்த வேண்டும் என அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பி.எஸ் எப்படி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது. 

அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி தொகுதியியை வென்றுள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

அதிமுகவின் 51ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, சூளகிரி பகுதியில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் கழக கொடியை இபிஎஸ் ஏற்றி வைத்தார். 

இதையும் படிங்க;- நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான். இணைப்புக்கான பேச்சுக்கே இடம் இல்லை- ஓபிஎஸ்யை அலற வைத்த இபிஎஸ்

பின்னர், பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ;- 400 கோடி மதிப்பிலான மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கொண்டு வந்தது அதிமுக அரசு என பெருமிதம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி தொகுதியியை வென்றுள்ளோம். இன்னும் சில மாவட்டத்தில் வென்றிருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்திருக்கும். எம்.ஜி.ஆர்க்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது. நம்மை தான் குடும்பமாக நினைத்தார்கள். அதனால் தான் நமக்காக இத்தனை திட்டங்களை கொண்டு வந்தார். 

இதையும் படிங்க;-  அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது.. அது எனக்கு கிடைத்துள்ளது.. இபிஎஸ்.!

அதிமுக ஆட்சியை வீழத்த வேண்டும் என அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பி.எஸ் எப்படி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது. வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ்.. அதிமுகவில் இருந்து விலகி போன துரோகிகளுக்கு மீண்டும் இடம் இல்லை என இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். 

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கழகத்தை உடைக்க நினைத்த ஸ்டாலினின் கனவு நிறைவேறவில்லை. ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாதவர் ஸ்டாலின் என இபிஎஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தண்ணீரில் மிதக்கிறது. விடியா திமுக அரசு எப்போது வீட்டுக்கு போகும் என தமிழகம் முழுவதும் ஒரே குரல். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி தான் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-   2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி

click me!