
ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனை பெரிதாகி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். முன்னதாக நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார்.
இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ஆபாச பேச்சு... பாஜக பிரமுகர் சிறையில் அடைப்பு!!
இதனிடையே பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. பின்னர் இருவரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு.. சண்டை போடாதீங்க.! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொன்ன ஐடியா !
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போடிநாயக்கனூர் தொகுதியில் அம்மாவிற்கு எதிராக தேர்தல் வேலைப்பார்த்தவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாமில்லாதவர். பலமுறை வாய்ப்பு வழங்கினோம். வாய்ப்பு கொடுக்கும்போதெல்லாம் அதைப் பயன்படுத்தி அதிமுகவை அழிக்கவே பார்த்தார். அதனால் தான் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை இனி கட்சியில் இணைப்பதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்ல என்று தெரிவித்தார்.