4 கிலோ எடை குறைஞ்சுட்டாரு, வீ்ட்டுச்சாப்பாடு கொடுங்க: ப.சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தல் வாதம்: நீதிமன்றக் காவல் 17-ம் தேதி வரை நீட்டிப்பு

By Selvanayagam PFirst Published Oct 3, 2019, 11:17 PM IST
Highlights

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது

சிதம்பரத்துக்கு சிறை உணவு ஒத்துக்கொள்ளாததால் அவர் 4 கிலோ எடை குறைந்துவிட்டார் அவரின் உடல்நிலை கருதி வீட்டு உணவு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவல் முடிந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 19-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்

இதையடுத்து ஜாமீன் கோரி சிதம்பரம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 30ம- தேதி தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. தற்போது அவரது சார்பில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்தநிலையில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குஹர், சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தர விட்டார்.

அதேசமயம் சிதம்பரத்துக்கு வீட்டு வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது இந்த மனு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் “ சிறை உணவு சிதம்பரம் உடல்நிலைக்கு ஒத்துரவில்லை. 4 கிலோ எடை குறைந்துவிட்டார். அவரின் வயது, உடல்நிலை கருதி வீ்ட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை

இதையடுத்து, சிறையில் இருக்கும் சிதம்பரத்துக்கு வீட்டு உணவு வழங்கலாம், அதிலும் சைவ உணவு மட்டுமே வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்அதுபோலவே நாள்தோறும் 2 முறை வெளியில் இருந்து மருத்துவர் சென்று உடல் பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

click me!