இராமமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நகைகளில் முறைகேடுகள் எதும் இல்லை... நிர்வாக ஆணையர் விளக்கம்..!

By T BalamurukanFirst Published Nov 5, 2020, 8:35 AM IST
Highlights

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்கம், வெள்ளி நகைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது எந்த முறைகேடுகளும்  நடக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது கோவில் நிர்வாகம்.
 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்கம், வெள்ளி நகைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது எந்த முறைகேடுகளும்  நடக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது கோவில் நிர்வாகம்.

இராமநாதபுரம் மாவட்டம். இராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது ராமநாதசுவாமி திருக்கோயில். அங்கு மாசி, சித்திரை, ஆடி மாத திருவிழாக்களின் போது ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்மனுக்கு கோயில் சார்பில் நகைகள் சாத்தப்படும். பின் இந்த நகைகள் கோயில் பிரகாரத்தில் உள்ள கருவறையில் வைத்து பத்திரமாக பாதுகாக்கப்படும். கடந்த 40 ஆண்டுகளுக்கு பின் நகைகளின் எடை, மதிப்பீடு போன்றவை சரிபார்க்கப்பட்டது. இதில் அம்மன் நகைகளின் எடைகள் குறைவாக உள்ளதாக பிரச்சனைகள் வெடித்தது. இந்த செய்தி பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தங்கம் வெள்ளி, நகைகளில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று இணை ஆணையர் தெரிவித்துள்ளார். கோயிலுக்கு சொந்தமான 215 தங்கம், 344 வெள்ளி நகைகள் ,பொருட்களும் சரியாக உள்ளன. தேய்மானம் காரணமாக எடை குறைவு, சிறுசிறு பழுதால் தங்க நகைகளில்ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 244 இழப்பு ஏற்பட்டுள்ளது. கோயில் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் முறைகேடு நடந்ததாக குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் ராமநாதசுவாமி கோவில் நகைகளின் பாதுகாப்பு பற்றி பக்தர்கள், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

click me!