இந்த பட்ஜெட்டிலும் அது இல்லையே ! ஏமாற்றம் அளித்த மத்திய அரசு !!

By Selvanayagam PFirst Published Jul 5, 2019, 4:44 PM IST
Highlights

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முந்தைய நிலையே தொடரும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது., இந்த அறிவிப்பு நடுத்தர வருவாய் ஈட்டுபவர்களுக்கு ஏமாற்றம் அளிததுள்ளது.
 

பாராளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்படவில்லை. ரூ.2.5 லட்சம் என்ற நிலையிலேயே நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
 
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வருமான வரி விதிப்பு மாற்றப்படவில்லை. 

ஆனால், தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையில் இருக்கும்பட்சத்தில் முழுமையான வரி விலக்கு (5 சதவீத கழிவு) என அறிவிக்கப்பட்டது. ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

அதாவது, தனிநபரின் மொத்த வருமானமே ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் அவர்கள் வரி செலுத்த தேவையில்லை. ஆனால் அதற்கு மேல் சம்பாதிப்பவர்கள், விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்த வேண்டும். 

இந்நிலையில் இன்றைய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வலி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வருப்படும் என பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஆனால்  நாடாளுமன்றத்தில் இன்ற மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

அதேசமயம் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!