சிவசேனா எங்களுக்கு தேவையே இல்ல !! உத்தவ் தாக்ரேவுக்கு ஆப்பு வைத்த அமித்ஷா !!

By Selvanayagam PFirst Published Oct 17, 2019, 11:57 PM IST
Highlights

பாரதிய ஜனதா கட்சி சிவசேனா ஆதரவு இல்லாமல் தனித்து பெரும்பான்மை பலத்தை பெற்று மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநில சட்ட சபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 288 இடங்களில் 145 இடங்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு 122 இடங்களை பிடித்தது. சிவசேனா கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளும் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி அமைத்தன.

பா.ஜ.க.வின் பட்னவீஸ் முதலமைச்சராக  உள்ளார். இந்த தடவை பாரதிய ஜனதா கட்சியும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாரதிய ஜனதா 152 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனித்து பெரும்பான்மை பலத்தை பெற்று மகாராஷ்ட்ராவில்  ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். இது தொடர்பாக ஒருதொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்

மகாராஷ்ட்ராவில் 3-ல் 2 பங்கு இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றும். கடந்த 5 ஆண்டுகளில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி அரசு ஏராளமான நலத்திட்ட பணிகளை செய்துள்ளன. இதனால் பாரதிய ஜனதா மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த தடவையும் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெறும். இந்த தடவை பாரதிய ஜனதா கட்சி யார் தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமித்ஷா தெரிவித்துள்ளார்..

ஏற்கனவே  நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில்வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என சிவசேனா  தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்திருந்த நிலையில் அமித்ஷாவும் பாஜக ஆட்சி அமைக்கும் என கூறியிருப்பது கூட்டணிக்குள் இருந்த நம்பகத் தன்னை குறைந்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!