இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைஞ்சிருக்கா? பொய் சொல்லாதீங்க ! ரவுண்டு கட்டி அடிச்ச ரகுராம் ராஜன் !!

Published : Mar 28, 2019, 07:59 AM IST
இந்தியா  7 சதவீத  பொருளாதார வளர்ச்சி அடைஞ்சிருக்கா? பொய் சொல்லாதீங்க ! ரவுண்டு கட்டி அடிச்ச ரகுராம் ராஜன் !!

சுருக்கம்

இந்தியப் பொருளாதாரம் 7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி பாஜகவினர் கூறுகிறார்கள்? என்று  கேள்வி எழுப்பியுள்ள ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தயவு செய்து உண்மையான புள்ளி விவரங்களை வெளியிடுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தி தேர்டுபில்லர் என்ற புத்தகத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் டெல்லியில் வெளியிட்டார். இதையடுத்து  சிஎன்பிசி- டி.வி.க்கு அளித்த பேட்டியில் இந்திய பொருளாதாரம் 7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது என்று எந்த புள்ளிவிவரப்படி கூறியிருக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. 


போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் நாம் எப்படி 7 சதவிகித வளர்ச்சி அடைய முடியும்?’ என்று மத்திய அமைச்சர் ஒருவரே கேள்விஎழுப்பியதும், ‘நாம் 7 சதவிகித வளர்ச்சியை அடையவில்லை’ என்று அவர் கூறியதும் எனக்குத் தெரியும் என தெரிவித்தார்.

அதேபோல வேலைவாய்ப்பு குறித்த நமது புள்ளி விவரங்களும் நீண்டகாலமாக சரியாக இல்லை. வேலைவாய்ப்பின்மையைப் போக்க மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. வேலைக்குஇளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீண்ட நாட் கள் ஆகின்றன. அதனால் நமக்குகிடைத்த பலன் என்ன? பண மதிப்பிழப்பு நடவடிக்கை வேலை செய் ததா இல்லையா? அதன் நேர் மற்றும் எதிர்மறை விளைவுகள் என்ன? இவை பற்றி ஆய்வுகள் தேவை எனவும் குறிப்பிட்டார்.

எனவே ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளி விவரத்தில் எங்கேகுழப்பம் ஏற்பட்டது என்பதையும் கண்டறிய வேண்டும்.

சிறந்த முறையில் நிர்வாகம் செய்வதற்கு, ஒவ்வொரு அரசும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பு குறித்து நம்பத் தகுந்த ஆவணங்கள் நமக்குதேவையாக உள்ளன. 

நாம் ஆவணங்களில் மோசடி செய்யவில்லை என்பதை உலகிற்கு நாம்தெரிவிக்க வேண்டியுள்ளது. வேலை தொடர்பாக நாம் வைத்துள்ள தகவல்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. இ.பி.எப்.ஓ. வைத்திருக்கும் தகவல்களை முழுமையாக நம்ப முடியாது. 

நாம் இன்றும் சரியான தகவல்களை சேகரிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் வறுமை கோட்டுக்குக் கீழ் எத்தனைபேர் உள்ளனர் என்ற கணக்கே இன்னும் சரியாகத் தெரியவில்லை. நான் நிதிஅமைச்சராக இருந்தால் நிலம்கையகப்படுத்துதல், விவசாயத்தை மேம்படுத்துதல், வங்கியில் கறுப்புப் பண ஒழிப்பு உள்ளிட்டவற்றில்தான் கவனம் செலுத்துவேன் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!