மேயர், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர்..! நேரடி தேர்தல் வேண்டாம்... பின்வாங்கிய எடப்பாடி..?

By Selva KathirFirst Published Nov 19, 2019, 10:30 AM IST
Highlights

மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேருராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது ரிஸ்க், மாறாக கவுன்சிலர்கள் மூலம் என்றால் அதிக இடங்களை எளிதில் கைப்பற்றிவிடலாம், பெரும்பாலா இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெறும் போது அவர்களை கைக்குள் போட்டு பதவிகளை வென்றுவிடலாம் என்று ஆளும் தரப்புக்கு சிலர் யோசனை தெரிவித்து வருகின்றனர். இதனால் நேரடி தேர்தல் என்கிற முடிவில் இருந்து எடப்பாடி தரப்பு பின்வாங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

கடந்த 2001ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்தனர்.

2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது திமுக மேயர்கள், பேரூராட்சி தலைவர்கள், நகர்மன்ற தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் வகையில் சட்டதிருத்தம் செய்தது. அதாவது மக்கள் கவுன்சிலர்களை வாக்களித்து தேர்வு செய்வார்கள். கவுன்சிலர்கள் தங்களுக்குள் ஒருவரை மேயராகவோ, நகர்மன்ற தலைவராகவோ, பேரூராட்சி தலைவராகவோ தேர்வு செய்வார்கள்.

இதன் மூலம் ஒரு மாநகராட்சியில் அதிக கவுன்சிலர்களை பெறும் கட்சி மேயர் பதவியை பெறும். இதே போல் தான் நகர்மன்ற தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளும் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் 2011ம் ஆண்டு மக்கள் நேரடியாக மேயர்களை தேர்வு செய்யும் வகையில் ஜெயலலிதா சட்டத்தை திருத்தி தேர்தலை நடத்தினார். அதே சமயம் 2016ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது கவுன்சிலர்கள் மேயர்களையும், நகர்மன்ற தலைவர்களையும், பேரூராட்சி தலைவர்களையும் தேர்வு செய்யும் வகையில் அறிவிப்பாணை இருந்தது.

ஆனால் இடஒதுக்கீடு முறையாக இல்லை என்று கூறி தேர்தலுக்கு திமுக தடை பெற்றது. அந்த தடைகளை எல்லாம் கடந்து தற்போது தேர்தல் நடைபெறும் சூழல் வந்துள்ளது. ஆனால் தற்போது வரை மேயர், நகர்மன்ற தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்களை எப்படி தேர்வு செய்வது என்று தேர்தல் ஆணையம் முடிவிற்கு வரவில்லை. இதற்கு காரணம் ஆளும் தரப்பிடம் இருந்து இந்த விவகாரத்தில் தெளிவான சமிக்ஞைகள் வரவில்லை என்பது தான் என்கிறார்கள்.

முதலில் மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேருராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது ரிஸ்க், மாறாக கவுன்சிலர்கள் மூலம் என்றால் அதிக இடங்களை எளிதில் கைப்பற்றிவிடலாம், பெரும்பாலா இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெறும் போது அவர்களை கைக்குள் போட்டு பதவிகளை வென்றுவிடலாம் என்று ஆளும் தரப்புக்கு சிலர் யோசனை தெரிவித்து வருகின்றனர். இதனால் நேரடி தேர்தல் என்கிற முடிவில் இருந்து எடப்பாடி தரப்பு பின்வாங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

click me!