ராகுலுக்கு முட்டுக்கட்டை.. சபாநாயக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. அதிரிபுதிரியாகும் நாடாளுமன்றம்..!

Published : Feb 09, 2026, 12:15 PM IST
om birla

சுருக்கம்

மக்களவையில் அமளி தொடர்கிறது, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இன்று நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. மக்களவையில் ராகுல் காந்தியை சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவையில் ராகுல் காந்தி பேசுவதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்படுகிறது.

இடுகுறித்து காங்கிரஸ் தரப்பினர் கூறுகையில், ‘‘ராகுல் காந்தி பேச அனுமதித்தால், அவை செயல்படாது என்றும், நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் முன்னர் கூறப்பட்டது. இதுதான் நடந்தது’’ என்கின்றனர். இன்று மக்களவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினர். காங்கிரஸ் உறுப்பினர்களின் கூச்சல் குழப்பம் காரணமாக, கேள்வி நேரம் தடைபட்டது. அமர்வு தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கூட்டம் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கூட்டம் தொடங்கியவுடன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி அணியின் வெற்றியை பாராட்டினர்.

பின்னர், சபாநாயகர் கேள்வி நேரத்தைத் தொடங்கியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி கோரத் தொடங்கினர். கேள்வி நேரத்தின் போது கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் என்றும், வேறு எந்தப் பிரச்சினையையும் எழுப்ப எந்த உறுப்பினரும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் சபாநாயகர் கூறினார். பட்ஜெட் விவாதத்தின் போது அனைத்து உறுப்பினர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேச வாய்ப்பளிப்பதாக உறுதியளித்து, எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் கேள்வி நேரத்தைத் தொடர அனுமதிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் மேடையை நெருங்கி கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். கூச்சல் குழப்பம் தொடர்ந்ததால், சபாநாயகர் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 12 மணி வரை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

காங்கிரஸ் எம்.பி., கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் சபையில் பேச அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார். அரசாங்கம் எதையும் சொல்லலாம், யாரையும் தாக்கலாம். சபாநாயகரே காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் மீது குற்றம் சாட்டுகிறார், ஆனால் எதிர்க்கட்சிக்கு இந்த சபையில் இடமில்லை. அவர்கள் பேசக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் மீதான இந்த மாதிரியான அணுகுமுறை இதற்கு முன்பு பார்த்ததில்லை’’ எனத் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?