துரைமுருகனை கைவிட்ட வன்னியர்கள்..! ஏசி சண்முகத்தை கவிழ்த்து விட்ட முதலியார்கள்..! இனி ஜாதி ஆட்டம் க்ளோஸ்...

By Selvanayagam PFirst Published Aug 10, 2019, 9:20 PM IST
Highlights

வேலூர் தொகுதி வாக்காளர்களில் தாங்கள் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒழுங்காக வாக்களித்தால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளில் வெற்றி பெற முடியும் என திமுகவின் கதிர் ஆனந்தும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏசி சண்முகமும் மனக்கோட்டை கட்டி இருந்தனர் 

வேலூர் தொகுதி வாக்காளர்களில் தாங்கள் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒழுங்காக வாக்களித்தால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளில் வெற்றி பெற முடியும் என திமுகவின் கதிர் ஆனந்தும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏசி சண்முகமும் மனக்கோட்டை கட்டி இருந்தனர்

ஆனால் துரைமுருகன் சார்ந்த அவரது சமூகத்தினரும் ஏசி சண்முகத்தின் சொந்த ஜாதியினரும் கைவிட்டுவிட்டனர் என்று சொல்கிறது வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 

வேலூரை பொறுத்தவரை மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளை  உள்ளடக்கியது வேலூர், கே வி குப்பம், அணைக்கட்டு,  குடியாத்தம்,  ஆம்பூர்,  வாணியம்பாடி ஆகிய தொகுதிகள் தான் இவை.
 
இதில் அணைக்கட்டு வேலூர் வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் துரைமுருகன் சார்ந்த வன்னியர் சமுதாயத்தினர் அடர்த்தியாக உள்ளனர் 

இதேபோன்று 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏ சி சண்முகம் சார்ந்த முதலியார் சமூகத்தினரும் பெருமளவில் உள்ளனர் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து ஆறாவது சுற்று வரை ஏசி சண்முகம் முன்னிலை வகித்து வந்தார் 

இதில் நான்கு ஐந்து ஆறு ஆகிய சுற்றுகளில் அணைக்கட்டு வாக்குகள் எண்ணப்பட்டன இங்கு பெரும்பான்மையாக வசிப்பவர்கள் துரைமுருகன் சார்ந்த சமூகத்தினர். அதனால் கதிர் ஆனந்துக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கணிப்புகளை பொய்யாக்கி  ஜாதி மதங்களைக் கடந்து தாங்கள் விரும்பியவர்களுக்கு ஓட்டு அளிப்போம் என நிரூபித்து இருக்கின்றனர் அணைக்கட்டு மக்கள் 

இதேபோன்று ஏசி சண்முகம் அதிகம் எதிர்பார்த்த வேலூர் நகரம் வாணியம்பாடி நகரத்தில் உள்ள முதலியார்கள் வாக்குகள் பெருமளவில் கதிர் ஆனந்த்துக்கு  கிடைத்துள்ளன 

இதன்மூலம் இந்த இந்தப் பகுதியில் இந்த சாதியினரை  நிறுத்தினால் தான் வெற்றிபெற முடியும் என்ற கருத்தை உடைத்தெறிந்து இருக்கிறார்கள் வேலூர் மாவட்ட மக்கள்

click me!