அய்யோ நீங்க இந்தப் பக்கம் வராதீங்க ! வேலூரில் பிரச்சாரம் செய்ய பாஜகவுக்கு தடை போட்ட அதிமுக !!

By Selvanayagam PFirst Published Aug 2, 2019, 8:38 PM IST
Highlights

இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் வேலூர் தொகுதியில் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டால் அது ஏ.சி.சண்முகம் வெற்றிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பாஜக அங்கு பிரச்சாரம் செய்ய இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தடை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

வரும் 5 ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள்  பிரச்சாரம் செய்து செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அனைத்து அமைச்சர்களும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

ஆனால் பாஜக மட்டும் வேலூர் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. . இதனால் அதிமுக, பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் பாஜக கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்த கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

இப்போதைக்கு அதுதான் முக்கியமான பணி என்பதால், கூட்டணிக் கட்சியான அதிமுக வேட்பாளரை ஆதரித்து வேலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என தமிழிசை தெரிவித்தார்.

ஆனால் முத்தலாக் பிரச்சனையில் அதிமுக நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்து ஆதரவு அளித்தால் இஸ்லாமியர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் பாஜக தலைவர்கள் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என அதிமுக தடை போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

click me!