5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை... அறிவித்தார் அமைச்சர் சிவசங்கர்!!

Published : May 05, 2022, 04:31 PM IST
5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை... அறிவித்தார் அமைச்சர் சிவசங்கர்!!

சுருக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறை அமைச்சர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

தற்போது மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், போக்குவரத்து தொழிலார்களுக்கான ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை 12 ஆம் தேதி நடைபெறும் என்றும், மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அணைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசினார். அதில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள், அதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே இந்த விலக்கு 3 வயதாக இருந்த நிலையில் தற்போது 5 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பணப்பரிவர்த்தனை அற்ற பயணச்சீட்டு முறை அறிமுகம். பயணக்கட்டண சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் மூலம் வழங்குதல். சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகள் நவீனமயம் ஆக்கப்படும். அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் நடமாடும் பணிமனைகள் உருவாக்கம். அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த போக்குவரத்து உதவி மையங்கள் ஏற்படுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே மகளிருக்கு பேருந்தில் இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குழைந்தைகளுக்கு பேருந்து கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!