தினகரனுக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை... வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

First Published May 22, 2017, 12:53 PM IST
Highlights
no bail for dinakaran and enquiry postponed


இரட்டை இலை லஞ்ச வழக்கில் டிடிவி.தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இரட்டை இலை லஞ்ச வழக்கில் கைதான டிடிவி. தினகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு இன்று நடைபெற்றது. 

அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரட்டை இலை லஞ்ச வழக்கில் தினகரனுக்கு எதிராக உள்ள ஆதாரங்களைக் காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று என்று வாதாடினார். இதனைத் தொடர்ந்து தினகரன் தரப்பில் பதில் வாதம் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் அன்றைய தினம் நடைபெறுகிறது. 

இதற்கிடையே இரட்டை இலை லஞ்ச வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தரகர் சுகேஷ் சந்திரசேகரரின் ஜாமீன் மனு மீதான உத்தரவு இன்று பிற்பகலில் வழங்கப்படவுள்ளது. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி.யின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவரது தரப்பே கால அவகாசம் கோரியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!