HIV ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு நோய்த் தொற்று இல்லை ! பெற்றோர் மகிழ்ச்சி !!

By Selvanayagam PFirst Published Mar 27, 2019, 8:22 PM IST
Highlights

சாத்தூரில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்படவில்லை என்று மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண்  ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகை நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில் தானமாக பெறப்பட்ட ரத்தம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த ரத்தத்தில் எச்ஐவி நோய் தோற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் போதிய சோதனை செய்யாமல் எச்.ஐ.வி ரத்தத்தை அந்த பெண்ணுக்கு ஏற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும கண்டனம் எழுந்தது.

அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர்  மதுரை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தபோது மனஉளைச்சலால் விஷம் அருந்தி தற்கொலை செயது கொண்டார்.

இந்நிலையில்தான் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த மார்ச் 4ம் தேதி அந்த குழந்தைக்கு எச்ஐவி தோற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டது.  அந்த குழந்தையின் 5 கைவிரல்களில் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து ரத்த ஆய்வு டுடிவகள் இன்று சந்த சேர்ந்தது. அதில் அந்த பெண்ணின் குழந்தைக்கு எந்த விதமான நோய் தொற்றும் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி. மருத்துவ பரிசோதனையின் முடிவில் அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் செந்தில்ராஜ்  ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி இல்லை. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!