
17 ஆவது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி 39 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதே போல் திருவாரூர் உள்ளிட்ட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு அதே நாளில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அன்று பொது மக்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர் போன்றோர் எந்தவித சிரமமுன்றி வாக்களிக்க 18ஆம் தேதியன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும். மேலும் தேர்தல் நடைபெறும் 18 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுகளை முடித்து விடுமுறை அளித்துவிடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.