ஏழில் ஒன்று கூட ஜெயிக்கக் கூடாது !! பாமகவை வீழ்த்த திமுகவின் செம பிளான் !!

By Selvanayagam PFirst Published Mar 27, 2019, 6:02 PM IST
Highlights

அ.தி.மு.க., கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி  போட்டியிடும், ஏழு தொகுதிகளிலும், அக்கட்சியை  எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என, திமுக பல திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாமக சார்பில் முதலில் திமுகவிடம் தான் பேசப்பட்டது. ஸ்டாலின் மருமகன் சபரீசன், பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.

இதையடுத்து  பாமகவை தோற்கடிக்க வேண்டும் வேண்டும் என திமுக கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்காக, அந்த 7 தொகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தும்படி, மாவட்டச் செயலர்களுக்கு, திமுக  தலைமை உத்தரவிட்டுள்ளது.


.
தர்மபுரியில், அன்புமணி; விழுப்புரம், வடிவேல் ராவணன்; கடலுார், கோவிந்தசாமி; அரக்கோணம், ஏ.கே.மூர்த்தி; மத்திய சென்னை, சாம்பால்; ஸ்ரீபெரும்புதுார், வைத்தியலிங்கம்; திண்டுக்கல்லில், ஜோதிமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த ஏழு பேரையும் தோல்வி அடைய செய்ய வேண்டும் என்பதில், திமுக தலைவர் ஸ்டாலின் தீவிரமாக உள்ளார். 

வட மாவட்டங்களில் பாமகவுக்கு டஃப் கொடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் சரியானது என்பதால் அக்கட்சிக்கு, சிதம்பரம், விழுப்புரம் என, இரு தனித் தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர பாமக போட்டியிடும் 7 தொகுதிகளிலும் திருமாவளவைனை தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்படி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வட மாவட்டங்களில் உள்ள, சிறுபான்மை சமுதாய ஓட்டுகளை பெறலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், திமுக சார்பில், மயிலாடுதுறை - ராமலிங்கம், வேலுார் - கதிர் ஆனந்த், தர்மபுரி - செந்தில்குமார், சேலம் - பார்த்திபன், அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் ஆகிய, வன்னியர் சமுதாய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

அதேபோல், ஆரணி தொகுதியில் வன்னியர் சமுதாயத்திற்கு தான், 'சீட்' தர வேண்டும். அதுவும், பாமக போட்டியிடும் அந்த தொகுதியில், அன்புமணியின் மைத்துனர், விஷ்ணுபிரசாத் போட்டியிடுவது தான் பொருத்தமாக இருக்கும்' என, திமுக  காங்கிரஸ் மேலிடத்திடம் எடுத்துக் கூறியதையடுத்து அங்கு விஷ்ணுபிரசாத்திற்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர காடுவெட்டி  குருவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வாரிய தலைவர் பொன்குமார் போன்றவர்களை, ஸ்டாலின் அழைத்து பேசி, பாமக  வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யும்படி கேட்டுள்ளார். 

திமுக – காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிற, 30 தொகுதிகளில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், ஆறு பேருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதையும், தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இப்படி திமுக வகுத்துள்ள வியூகத்தை, அதிமுக கூட்டணி முறியடிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

click me!