புதுச்சேரியை புரட்டி எடுத்த நிவர் புயல்... முதல்வர் நாராயணசாமி வீட்டை சூழ்ந்த வெள்ளம்..!

Published : Nov 26, 2020, 09:57 AM ISTUpdated : Nov 26, 2020, 05:02 PM IST
புதுச்சேரியை புரட்டி எடுத்த நிவர் புயல்... முதல்வர் நாராயணசாமி வீட்டை சூழ்ந்த வெள்ளம்..!

சுருக்கம்

புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் முதல்வர் நாராயணசாமி வசிக்கும் வீட்டை மழை நீர் முற்றிலுமாக சூழ்ந்துள்ளது. 

புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் முதல்வர் நாராயணசாமி வசிக்கும் வீட்டை மழை நீர் முற்றிலுமாக சூழ்ந்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி-மரக்காணம் இடையே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. இதன் காரணமாக  புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கன மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வசிக்கும் எல்லையம்மன் கோயில் வீதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மேலும் புதுச்சேரியின் மையப்பகுதிகளில் உள்ள பாரதி வீதி, புஸ்சி வீதி பல சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. புதுச்சேரியில் புயல் கரையை கடந்த பின்னரும் கடல்அக்ரோசத்துடன் காணப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

சீமான் பேச்சை காப்பியடித்தாரா விஜய்?.. ஆதாரங்களை அடுக்கும் 'தம்பிகள்'.. இணையத்தில் மோதல்!
என் வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சி..! தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு!