தமிழகத்திற்கு வாரி வழங்கிய நிர்மலா சீதாராமன்.. தமிழக சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு 1.3 லட்சம் கோடி நிதி..

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2021, 11:50 AM IST
Highlights

தமிழகத்தில் 35 ஆயிரம் கிலோ மீட்டர் நீலத்திற்கு சாலைகளை மேம்படுத்த 1.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார். மும்பை- கன்னியாகுமரி இடையே புதிய தொழில் வழித்தடம் அமைக்க திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் 

தமிழகத்தில் 1.3 லட்சம் கோடியில் சாலை திட்டங்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 நிதி ஆண்டிற்கான ட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் முதல்முறையாக காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது,  நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார், அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். கொரோனா நெருக்கடியில் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதை சரி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நிவாரண சலுகைகளும் வழங்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் இந்த பட்ஜெட்டை வாசித்து வருகிறார். 

தமிழகத்தில் 35 ஆயிரம் கிலோ மீட்டர் நீலத்திற்கு சாலைகளை மேம்படுத்த 1.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார். மும்பை- கன்னியாகுமரி இடையே புதிய தொழில் வழித்தடம் அமைக்க திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். அதேபோல் மேற்கு வங்கத்திற்கு சாலை மேம்பாட்டிற்கு, 25 ஆயிரம் கோடி ரூபாயும், கேரளாவுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயும் சாலை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

சாலை  திட்டங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு 1.18 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறவித்துள்ளார்.  மதுரை-கொல்லம் வரை நவீன வசதிகளுடன் சாலை வசதி செய்யப்படும் என அவர் அறிவித்தார்.

தமிழகத்துடன் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலைத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும், மதுரையிலிருந்து-கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, கன்னியாகுமரி-கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் சாலை மேம்பாட்டிற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என அவர் அறிவித்தார். 
 

click me!