பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி நிதி.. துவக்கத்திலேயே நிர்மலா சீதாராமன் அதிரடி..

By Ezhilarasan Babu  |  First Published Feb 1, 2021, 11:32 AM IST

தற்போது தாக்கல் செய்யப்படும் சுயசார்பு இந்தியா திட்டம்  5 மினி பட்ஜெட்டுக்கு சமமானது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் பொருளாதாரம் மீண்டு வருகிறது, சுய சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் 27 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, 


கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் சீதாராமன் வெளியிட்டுள்ளார். 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 நிதி ஆண்டிற்கான ட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் முதல்முறையாக காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது,  நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார், அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். 

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா நெருக்கடியில் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதை சரி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நிவாரண சலுகைகளும் வழங்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் இந்த பட்ஜெட்டை வாசித்து வருகிறார். கொரோனா களத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி கூறி உரையை தொடங்கினார். கொரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டுமே 2 தடுப்பூசிகளை விரைவாகக் கொண்டு வந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாமல் விட்டிருந்தால் கொரோனாவால் மிகப்பெரிய சேதத்தை நாடு சந்தித்திருக்கும். தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை  தாக்கல் செய்கிறேன், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வெளிமாநில தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. 

தற்போது தாக்கல் செய்யப்படும் சுயசார்பு இந்தியா திட்டம்  5 மினி பட்ஜெட்டுக்கு சமமானது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் பொருளாதாரம் மீண்டு வருகிறது, சுய சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் 27 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது,  பொருளாதாரம் வளர்வதற்கு தேவையான வாய்ப்புகள் அனைத்தையும் அரசு பயன்படுத்தி வருகிறது, கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு தடையின்றி உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன, சுயசார்பு திட்டம் நமது நாட்டுக்குப் புதிதல்ல, பழங்கால இந்தியா சுய சார்பாக தான் இருந்து வந்துள்ளது. 

2021 ஆம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும், மேலும் 2 கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும், சுகாதார கட்டமைப்பு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 54.184 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் தொடங்கப்படுகிறது. தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புக்கு  மத்திய பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. என அவர் அறிவித்தார். 
 

click me!