தமிழகத்தில் கடற்படை அதிகாரிகளுக்கு அவமதித்தாரா நிர்மலா சீதாராமன் ? கேரள முதல்வர் பினராயி விஜயனைப் பாருங்க…

 
Published : Dec 05, 2017, 10:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
தமிழகத்தில் கடற்படை அதிகாரிகளுக்கு அவமதித்தாரா நிர்மலா சீதாராமன் ?  கேரள முதல்வர் பினராயி விஜயனைப் பாருங்க…

சுருக்கம்

Nirmala Sitaraaman insulted Navy officers in Tamil Nadu

ஓகி புயலால் சிக்கிய மீனவர்களை மீட்பது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, கடற்படை அதிகாரிகளை நிற்கவைத்து பேசியதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனமும், சர்ச்சைகளும் எழுந்தன.

இதையடுத்து, இந்த குற்றச்சாட்டுக்கு அவர் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

ஆலோசனை

தமிழகத்தையும், கேரளாவையும் தாக்கிய ஓகி புயலால் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் கரைக்கு திரும்பவில்லை. இதையடுத்து, தமிழக, கேரள மாநிலத்துக்கு சென்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர்நிர்மலா சீதாராமன் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

நிற்க வைத்தனரா?

தமிழகத்துக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது,  கடற் படையினரை அழைத்து மீட்பு பணி நிலை குறித்து நிர்மலா கேட்டறிந்தார். 

அப்போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் ‘ஷோபாவில்’ அமர்ந்திருக்க, கடற்படை அதிகாரிகள் நிற்க வைத்து கேள்வி கேட்கப்பட்டது போன்ற புகைப்படம் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடங்களில் வைரலாகப் பரவி சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. 

சர்ச்சை, விமர்சனம்

சமூக ஊடங்களில் பலர் கடற்படையினருக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து, அவர்களை நிற்க வைத்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்தனர்.
 
“கடற்படை அதிகாரிகளை அமரவைக்காமல் அவர்களை திருடர்கள் போல் விசாரிக்கிறீர்களே’’, “ கடற்படை அதிகாரிகள் என்றும் அதிகாரிகள், நீங்கள் அப்படியல்ல’’ என்றும், சாதாரண வீட்டு வேலைக்காரர் போல் கடற்படை அதிகாரிகளை நடத்துகிறீர்களே, இது அவமரியாதை செய்யும் செயல்’’ என பலர் கண்டனம் தெரிவித்தனர். 

கேரளாவில் மரியாதை

அதேசமயம், கேரள சென்ற நிர்மலா சீதாராமன்,  முதல்வர்  பினராயி விஜயன்,ஆகியோருடன் அமர்ந்து கடற்படையினருடன் மீனவர்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அந்த புகைப்படத்தில் கடற்படையினர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டு மரியாதையாக நடத்தப்பட்டு இருந்தனர். 

விளக்கம்

இந்த புகைப்படத்தை ஒப்பிட்டு, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையானது. கேரளா முதல்வர் பினராயிவிஜயன் கடற்படையினருக்கு கொடுக்கும் மரியாதையைப் பாருங்கள், தமிழகத்தில் கடற்படையினருக்கு கிடைக்கும் மரியாதை இதுதானா? என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், நிர்மலாசீதாராமன் இதற்கு விளக்கம் அளிக்கவும் கோரப்பட்டது.  

நிர்மலா பதில்

இதையடுத்து, நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “ தமிழக அரசு வெளியிட்ட புகைப்படம் என்பது, கடற்படை அதிகாரிகள் கூட்டம் நடக்கும் இடத்துக்குள் நுழையும் போது எடுக்கப்பட்டது. அவர்கள் அறைக்குள் வந்தவுடன் அவர்கள் அமர்வதற்காக அதிகமான நாற்காலிகள் கொண்டு வந்து போடப்பட்டன. 

ஒவ்வேரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். எந்த விதத்திலும் கடற்படை அதிகாரிகளுக்கு அவமரியாதை செய்யப்படவில்லை. அவர்களின் தியாகத்தை ஒருபோதும் மதிப்பிடமுடியாது. ஜெய் ஹிந்த்’’ எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?