காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி போட்டி இன்றி தேர்வு.....

 
Published : Dec 05, 2017, 10:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி போட்டி இன்றி தேர்வு.....

சுருக்கம்

ragul gandhi elected the president of congress party

காங்கிரஸ் தேசிய தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை எதிர்த்து ஒருவர்கூட போட்டியிடாததால், அவர் போட்டி இன்றி ஒருமனதாக தேர்வாகியுள்ளார்

கடந்த 1998ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். அவரின் வயது மூப்பு காரணமாக அடிக்கடி  உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து,  கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என அந்த கட்சிக்குள் மூத்த தலைவர்கள் மட்டுமன்றி மாநிலங்களில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.



இதையடுத்து, அனைத்து மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திலும் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. கடந்த மாதம் கூடிய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல் காந்தி இன்று காலை டெல்லி அக்பர் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுலகத்துக்கு வந்தார்.

முன்னதாக அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் இல்லத்திற்கு சென்று ராகுல் காந்தி ஆசி பெற்றார்.

அதன்பின், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த ராகுல் காந்தி, தலைவர் பதவிக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப்போது கட்சியின் மூத்த தலைவர்களான கமல்நாத், ஷீலா தீக்‌ஷித், மோதிலால் வோரா, தருண் கோகாய் ஆகியோர் அவரை முன்மொழிந்தனர்.

ராகுல் காந்தியைத் தவிர வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாத பட்சத்தில் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவியது.

ராகுல் காந்தி நேரில் வந்து தாக்கல் செய்த வேட்பு மனு தவிர அவரது பெயரால் 89 பேர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்களை இன்று பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்து தாக்கல் செய்ப்பட்ட 89 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக இன்று மாலை அறிவித்துள்ளார்..

இது குறித்து தேர்தல்அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன வெளியிட்ட அறிவிப்பில் “ ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்து முன்மொழியப்பட்ட 89 வேட்புமனுக்களையும் பெற்று, பரிசீலணை செய்தோம். இந்த வேட்புமனுக்கள் அனைத்து மாநிலங்களில் இருந்து வந்து இருந்தன. இந்த 89 வேட்புமனுக்களையும் ஆய்வு செய்ததில் அவை செல்லத்தக்கது என ஏற்கப்பட்டது. இதையடுத்து, ராகுல் காந்தி மட்டுமே வேட்பாளராக களத்தில் உள்ளார்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரே வேட்பாளரான ராகுல் காந்தி போட்டி இன்றி ஒருமனதாக தேர்வாகியுள்ளார்

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!