மந்தநிலையில் இருக்கும் ரியல்எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி: இன்ப அதிர்ச்சி அளித்த நிர்மலா சீதாராமன் !!

By Selvanayagam PFirst Published Nov 6, 2019, 10:43 PM IST
Highlights

மந்தநிலையில், தேங்கிக் கிடக்கும் 1600 திட்டங்களை விரைந்து முடிப்பதற்காக ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்
.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடுமுழுவதும் தேங்கிக்கடக்கும் 1,600 கட்டுமானத் திட்டங்களை விரைவுப்படுத்துவதற்காகவும், முடிக்கவும் ரூ.25 ஆயிரம் கோடி நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இதில் ரூ.10 ஆயிரம் கோடியே மாற்று முதலீடு நிதி மூலமும், மீதமுள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிதி எல்ஐசி காப்பீடு நிறுவனமும்,ஸ்டேட் வங்கியும் சேர்ந்து வழங்கும். இந்த நிதியுதவி மூலம் நாடுமுழுவதும் தேங்கிக்கிடக்கும்  1600 திட்டங்களில் 4.58 லட்சம் வீடுகளை முடிப்பதற்கு உதவும்.
குறைந்தவிலையில், நடுத்தரவ குடும்பத்தினருக்காக கட்டப்படும் வீடுகள் நிதியுதவி இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன, 

அந்த திட்டங்களை முடிப்பதற்காக சிறப்பு திட்டம் மூலம நிதியுதவி அறிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப்பணிகள் விரைந்து முடிக்க முடியும். 


இந்த நிதியுதவி மூலம் ரியல் எஸ்டேட் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். வேலைவாய்ப்பை உருவாக்கி, சிமெண்ட், இரும்பு கம்பி, உருக்குத்துறை ஆகியவற்றில் உற்பத்தியையும், தேவையையும் உருவாக்க முடியும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

click me!