பத்தாங்கிளாஸ் ஃபெயிலான மூணு பேருக்கு தூக்குதண்டனை: அதிரடி, ஆவேச தீர்ப்புல்ல!?

By Ezhilarasan BabuFirst Published Jan 16, 2020, 2:41 PM IST
Highlights

திகார் சிறையிலிருக்கும் நிர்பயா பலாத்கார வழக்கின் குற்றவாளிகள், கடந்த ஏழு ஆண்டுகளில் 23 முறை சிறை விதிகளை மீறியதற்கான தண்டனையை பெறுள்ளனர். சிறையில் இருக்கையில் எந்த வேலையையும் செய்ய முகேஷ் மறுத்துவிட்டான். முகேஷ், பவன் மற்றும் அஜய் மூவரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். ஆனால் ஃபெயில் ஆகிவிட்டனர். -பத்திரிக்கை செய்தி. 

*திருப்பத்தூர் அடுத்த அம்மணாங்கோயிலை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயியான இவர் மனைவி பிரியா. இவர்களுக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரு பெண் குழந்தைகள். நேற்றும் பொங்கல் பண்டிகையன்று, வீட்டில் பொங்கல் சாப்பிட்ட இவ்விரு குழந்தைகளும் மயங்கி விழுந்து இறந்தனர். ‘ஃபுட் பாய்சன்’ என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
- பத்திரிக்கை செய்தி

* பா.ஜ.க. மாநில தலைவர் பதவி கிடைக்காத கோபத்தை எங்கள் மீது பொன்.ராதாகிருஷணன் திருப்புகிறார். சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பலவேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மத்திய அமைச்சராக இருந்தவர் தமிழகத்திற்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்தார். - ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர்)

* தமிழகத்தில்  ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் போது ஜாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள எண் போன்ற ஆதாரங்களை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கேட்டிருக்கிறது. ஆனால் அவை அவசியம் இல்லை. - செங்கோட்டையன் (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்)

* காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி குறித்துப் பேசினேன். தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. வெற்றி குறித்தும் பேசப்பட்டது. இரண்டு கட்சிகளும் இணைந்த கைகள், பிரிவதற்கு வாய்ப்பே இல்லை. - கே.எஸ்.அழகிரி (தமிழக காங்., தலைவர்)

*பார்லிமெண்டில் பா.ஜ.க.  எம்.பி.க்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, பார்லிமெண்ட் கூட்டம் போல் தெரிவதில்லை. பஜனை கூட்டம் போலத்தான் தெரிகிறது. ஆனால் அவர்கள் மத்தியில் நம் எம்.பி.க்கள் சிங்கம் போல் கர்ஜிக்கின்றனர். 
- பாலபாரதி (மாஜி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.)

*இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்ப வேண்டும். ஏனெனில் இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழர்களின் நிலங்களை சிங்கள மக்களுக்கு இலங்கை அரசு வழங்கி வருகிறது. - விக்னேஸ்வரன் (வடக்கு மாகாண மாஜி முதல்வர்)

* குடியுரிமை திருத்த சட்டம், இந்திய குடிமகனின் குடியுரிமையை ஒரு குமாஸ்தா நிர்ணயம் செய்யும் நிலையை ஏற்படுத்தும். பணம் இருப்பவன் குடியுரிமை பெறுவான் பணம் இல்லாத ஏழைகள், நடுத்தெருவில் நிற்பர். குடியிரிமை இல்லாதவர்களுக்கு ஓட்டுரிமை பறிக்கப்படும். - அருணன். (பேராசிரியர்)

* ஃபுல் மீல்ஸ்! என்று சொல்கின்றனரே, சாதம், சாம்பார், ரசம், கூட்டுகள், வடை, அப்பளம், பாயசம் போன்ற உணவுகள் அடங்கியதை முப்பது வயதுக்கு மேல்தான் சாப்பிட்டேன். அறுசுவை உணவை நாற்பது வயதுக்கு மேல்தான் சாப்பிட்டேன். காரணம், வறுமை. - தேவா (இசையமைப்பாளர்)

*காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தலைவரகாக சோனியா உள்ளார். தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ அவர் உள்ளார். நிரந்தர தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார். அது விரைவில் நடக்கும். ஆனால் மத்திய அரசின் பல நிறுவனங்களுக்கு தலைவர்களே கிடையாது. - ப.சிதம்பரம் (மாஜி மத்தியமைச்சர்)

* சர்வதேச அளவிலான எந்த பிரச்னையிலும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல், தீர்க்கமான  முடிவெடுப்பது இந்தியாவின் கொள்கை. அதுபோல எந்த விவகாரத்திலும் தலையிட்டு, இடையூறு விளைவிக்காது. பிரச்னைகளுக்கு தீர்வு காண முயல்வதும், அது குறித்த தன் முடிவை உறுதியாகவும் தெரிவிக்கும் இந்தியா. 
- ஜெய்சங்கர் (மத்திய வெளி விவகாரங்கள் துறை அமைச்சர்)

* சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த உரான சிலுவம்பாளையத்தில் , மனைவி ராதா, மகன் மிதுன் குமாருடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். பசுக்களுக்கு பழங்கள் வழங்கினார். பின் பானை உடைக்கும் போட்டியில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தார். - பத்திரிக்கை செய்தி. 


* திகார் சிறையிலிருக்கும் நிர்பயா பலாத்கார வழக்கின் குற்றவாளிகள், கடந்த ஏழு ஆண்டுகளில் 23 முறை சிறை விதிகளை மீறியதற்கான தண்டனையை பெறுள்ளனர். சிறையில் இருக்கையில் எந்த வேலையையும் செய்ய முகேஷ் மறுத்துவிட்டான். முகேஷ், பவன் மற்றும் அஜய் மூவரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். ஆனால் ஃபெயில் ஆகிவிட்டனர். - பத்திரிக்கை செய்தி. 

- விஷ்ணுப்ரியா

click me!