
உயர்கல்வி துறையை, உயர் ‘கலவி’துறையாக மாற்றியிருக்கிறார் பேராசிரியை நிர்மலாதேவி. யுனிவர்சிட்டியின் அதிகார மையமாக இருப்பவர்களுக்கு கல்லூரி மாணவிகளை ட்ரீட்டாக கொடுக்க முயன்ற அவரது மொபைல் போன் பேச்சு வாட்ஸ் ஆப்பில் வைரலாகி, தேசம் முழுக்க தமிழகத்தின் மானம் பஞ்சராகி கிடக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தால் அவசரம் அவசரமாக அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிட்டியான ‘சந்தானம் விசாரணை கமிஷன்’ மீது நம்பிக்கை இல்லை என்கிற குற்றச்சாட்டு வெளிப்படையாகவே எழுந்துள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவராக உள்ள பேராசிரியர் முரளி, “கவர்னர் அமைத்திருக்கும் சந்தானம் குழும் மீது நம்பிக்கை இல்லை. அவர் கவர்னர், துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு ஆதரவாக செயல்பட கூடும். எனவே இந்த சமுதாய நலன் மீது அக்கறையுள்ள, ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகளை இதில் அமர்த்த வேண்டும்.
இந்த பல்கலையின் துணை வேந்தரோ எல்லோரையும் பயமுறுத்தி வருகிறார். பல்கலைக்கழக பணியாளர்கள், பேராசிரியர்களை மிரட்டி வருகிறார். முருகன், கருப்பசாமி இருவரையும் பழிகடாவாக்கிவிட்டு மற்ற முக்கிய குற்றவாளிகள் அத்தனை பேரும் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.” என்று கொதிப்பாய் கூறியுள்ளார்.
விசாரணை கமிட்டியின் நம்பக தன்மையையே இவர்கள் கேள்வி கேட்டுவிட்டதால் இந்த வழக்கு எப்படி போகுமோ? என்பதே புதிராக இருக்கிறது.